அமரன் பட இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் பூஜை: ரசிகர்கள் கோரிக்கை..
அமரன் படக்குழு அனைவரின் பாராட்டு மழையில் மகிழ்ந்திருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் பட பூஜை இன்று நடைபெற்றிருக்கிறது. இது குறித்த காட்சிகளை பார்ப்போம்..
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தை தற்போதைக்கு டி55 (D55) என அழைக்கிறார்கள்.
டி55 படத்தின் பூஜை, சென்னையில் இன்று நடைபெற்றது. கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் டி55 பட பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, நல்ல செய்தியை ரசிகர்களுடன் ஷேர் செய்திருக்கிறார்கள்.
கோபுரம் ஃபிலிம்ஸ் மூலம் அன்புச்செழியன் தயாரிக்கும் டி55 படம் குறித்து, தற்போது பரபரப்பாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. படத்தின் பூஜை புகைப்படத்தில் தனுஷுடன் இயக்குநர் வெற்றிமாறனும் மாலையும், கழுத்துமாக நிற்கிறார்.
ராஜ்குமார் பெரியசாமி படத்தில் வெற்றிமாறன் என்ன செய்கிறார் என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஒருவேளை அழைப்பின் பேரில் நிகழ்ச்சியில் கலந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எது எப்படியோ, வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியை ரசிகர்கள் மிகவும் ரசித்து வரவேற்பர்.
இந்நிலையில் டி55 படத்தின் கூட்டணி துவங்கியிருக்கிறது. டி55 பூஜை போட்டாலும் படப்பிடிப்பு இன்றே துவங்கவில்லை. படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்கிற விபரம் இனி வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவியை வைத்து அமரன் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த நிலையில், தனுஷ் படத்தை இயக்கவிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. இந்த படமும் பெரிய அளவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி55 பட அறிவிப்பை பார்த்த ரசிகர்களோ, அசுரனுடன் அமரன் சேர்ந்திருக்கிறார். இந்த டி55 படம் கண்டிப்பாக வசூல் வேட்டை நடத்தும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தனுஷ், ராஜ்குமார் பெரியசாமிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளனர்.
மேலும், டி55 பட பூஜை வீடியோவை வெளியிடுமாறு கோபுரம் பிலிம்ஸ்க்கு தனுஷ் ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்வமிகு கோரிக்கை ஏற்கப்படுமா? பார்க்கலாம்..