சீமானுக்கு, தளபதி விஜய் பிறந்த நாள் வாழ்த்து: பரபரக்கிறது இதோ இணைய நிகழ்வுகள்..
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தளபதி விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிகழ்வு இணையத்தில் பரபரப்பாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்..
‘என்னோட தம்பி அரசியலுக்கு வந்தால், அண்ணன் தான் முதல் ஆளாக சந்தோஷப்படுவேன்’ என சொல்லி வந்த சீமான், விஜய்யின் பிரம்மாண்ட மாநாட்டை பார்த்து கடுப்பானாரோ?
அந்நிலையில், விஜய் குறித்து அவதூறு கருத்துக்களையும் தரம் தாழ்ந்த பேச்சுக்களையும் அடுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டார்.
விஜய் ரசிகர்கள், வலைதளங்களில் சீமானை தூற்றியும் காமெடி மீம்களாகவும் சித்தரித்து வந்த நிலையில், விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என வாழ்த்து ட்வீட் போட்டுள்ளார். இதனால், விஜய்க்கு ஆதரவாகவும் சீமானை விளாசியும் கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.
தன்னை பற்றி தப்பாக பேசிய சீமானுக்கு விஜய் வாழ்த்து சொல்கிறார். ஆனால், மூத்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், விஜய் ஏன் வாழ்த்து சொல்லவில்லை?
மேலும், ‘கோட்’ படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவுக்கு கூட ஒரு வாழ்த்து ட்வீட் போடவில்லையே ஏன்? எனவும் கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருவது வைரலாகி வருகிறது.
இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்யும் பொருட்டு, தளபதி விஜய்.. சீமானுக்கு மட்டும் வாழ்த்து சொல்லியிருப்பாரோ.!