ஜி.வி.பிரகாஷ் மீது அப்படி என்ன கோபம் அனிருத்துக்கு? வைரலாகும் பதிவுகள்
‘அமரன்’ படத்துக்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷ் மீது அனிருத்துக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வைரல் நிகழ்வை பார்ப்போம்.
வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்றையும் வாழ்வியலையும் அப்படியே கண்முன் கொண்டுவந்து காட்டியிருந்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. சிவகார்த்திகேயன் கொடுத்த கதாபாத்திரமே வாழ்ந்து, கச்சிதமாக பொருந்தியிருந்தார். சாய் பல்லவியின் நடிப்பும் மிக சிறப்பு.
இவ்வகையில், அமரன் படத்தை அனைவரும் பாராட்டியுள்ளனர். ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் அன்றே அமரன் படத்தை பார்த்துவிட்டு, அதன் கிளைமாக்ஸ் காட்சிகள் தன்னை கலங்க வைத்ததாக, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, நடிகர் சிவக்குமார், நடிகர் சிம்பு, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரும் படத்தை பாராட்டினர். இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தும் அமரன் படம் பார்த்த பின்னர் அதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், அமரன் பெஸ்ட் சினிமா, என்னுடைய சிவகார்த்திகேயனை நினைத்து பெருமைப்படுகிறேன். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் அவரது குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். கமல்ஹாசன், மகேந்திரன் மற்றும் டிஸ்னி ஆகியோருக்கு சல்யூட் என பதிவிட்டு இருந்தார்.
அமரன் படத்தை பாராட்டி அவர் இந்த பதிவை போட்டிருந்தாலும், அதுவே அவருக்கு வினையாக மாறி இருக்கிறது.
அமரன் படத்திற்கு முதுகெலும்பாக இருந்ததே அப்படத்தின் இசை தான். அதற்காக ஜி.வி.பிரகாஷை ஒரு இடத்தில் கூட வாழ்த்தாமல் அனிருத் போட்டுள்ள இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள்.
ஒரு இசையமைப்பாளராக இருந்துகொண்டு, சக இசையமைப்பாளரை கண்டுகொள்ளாமல் இருக்கலாமா? என கேள்வி எழுப்பி வருவதோடு, ஜி.வி. பிரகாஷ் மீது அப்படி என்ன கோபம் அனிருத்துக்கு? என நெட்டிசன்கள் கேள்விக் கணைகளை தொடுத்து வருகின்றனர். பதில் சொல்வாரா அனி.?