Web Ads

இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்

இந்த வாரம் ஓடிடி வெளியாடக உள்ள திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம்..

டிடி நெக்ஸ்ட் லெவல்: சந்தானம் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கத்தில் தனது நண்பர் ஆர்யா தயாரித்து சந்தானம் நடித்து கடந்த மாதம் 16 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.

இப்படத்தில் இயக்குனர்கள் செல்வராகவன், கெளதம் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள்ரவி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது

லெவன்: பெரிய விளம்பரம் இல்லாமல் திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற படம் லெவன். லோகேஷ் அஜ்லிஸ் என்பவர் இயக்கிய இப்படத்தில் நவீன் சந்திரா, அபிராமி, திலீபன், ஆடுகளம் நரேன், ரித்விகா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர். திரில்லர் பாணியில் வெளியான இப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து இருந்தது.

சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை போன்று அமைக்கப்பட்டு இருந்த இப்படத்தின் கதைக்களம் திரில்லர் விரும்பிகளுக்கு பெரும் ட்ரீட்டாக இருந்தது.

இந்நிலையில், திரையரங்குகளில் வரவேற்பினை பெற்ற லெவன் படம் அமேசான் ப்ரைம், டெண்டுகொட்டா மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஆலப்புழா ஜிம்கானா: கொரோனாவிற்கு பின்பான ஓடிடி வளர்ச்சி காரணமாக மலையாள படங்களுக்கு கோலிவுட்டை சார்ந்த பலரும் ரசிகர்கள் ஆகிவிட்டனர்.

இதனால் மலையாளத்தில் வெளியாகும் பல படங்கள் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘ஆலப்புழா ஜிம்கானா’ பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து நல்ல வரவேற்பினை பெற்றது.

பிரேமலு நஸ்லீன் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் ட்ராமா கதைக்களத்தில் காமெடி ஜானரில் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான ஆலப்புழா ஜிம்கானா, இந்த வார ஓடிடி ரிலீசாக சோனி லைவ்வில் வெளியிடப்பட்டுள்ளது.

படக்கலம்: மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த மற்றொரு படம் ‘படக்கலம்’. சுராஜ், சந்தீப் பிரதீப்,ஷெராப் தீன், நிரஞ்சனா அனுப், பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் காமெடி படமாக வெளியாகி வரவேற்பினை பெற்றது.

வித்தியாசமான கதைக்களத்தில், சுவாரஸ்யமான சம்பவங்களுடன் ரிலீசாகி பலரையும் கவர்ந்து இருந்தது படக்கலம். இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஜுன் 10 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

சுபம்: சமந்தா முதன்முறையாக தயாரித்து கடந்த மே மாதம் திரையரங்குகளில் ரிலீசானது சுபம். ஷாலினி கொண்டேபுடி, ஹர்ஷித் ரெட்டி, ஷ்ரியா கொந்தம், ஷ்ரவணி லட்சுமி, கவிரெட்டி ஸ்ரீனிவாஸ், சரண் பெரி உள்ளிட்ட பல நடிப்பில் ஹாரர் காமெடி ஜானரில் ரசிகர்களை கவர்ந்திருந்தது ‘சுபம்’. இந்நிலையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.

அதேபோல் அக்ஷய் குமார் , மாதவன் , அனன்யா பாண்டே ஆகியோர் நடிப்பில் கரன் சிங் தியாகி இயக்கியிருந்த கேசரி சேப்டர் 2 ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த வார ஓடிடி ரிலீசாக வெளியிடப்பட்டுள்ளது.

ராணா நாயுடு 2: கடந்த 2023 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகி வரவேற்பினை பெற்ற வெப் தொடர் ராணா நாயுடு. இப்படத்தில் ஏகப்பட்ட ஆபாச வசனங்கள் இடம்பெற்று இருப்பதாக பல விமர்சனங்கள் எழுந்தது. ஆனாலும் இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. வெங்கடேஷ் டகுபதி மற்றும் ராணா டகுபதி நடிப்பில் அப்பா, மகனுக்கு இடையில் நடக்கும் மோதல்களை மையமாக வைத்து ராணா நாயுடு வெளியாகி இருந்தது.

this week ott release movies