Web Ads

மணிரத்னத்துக்கே பாடம் எடுக்கிறார்கள்: பிரபல இயக்குனர் ஆவேசம்

‘தக் லைஃப்’ பட விமர்சனங்கள் தொடர்பாக, மணிரத்னத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் ‘8 வசந்தலு’ என்ற தெலுங்குப் பட இயக்குனர் பனிந்திரா நார்செட்டி. அவர் தெரிவிக்கையில்,

‘தங்கள் கருத்தை தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், அடுத்தவர்களை விமர்சிக்க நமக்கு தகுதி இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

‘தக் லைஃப்’ படம் ரிலீஸான பிறகு படம் எப்படி இயக்க வேண்டும் என மணிரத்னம் சாருக்கே மக்கள் பாடம் எடுக்கிறார்கள். 40 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் லெஜண்டான இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு படம் பார்க்கும் நபர்கள் எல்லாம் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மணிரத்னம் இயக்கிய படங்களை எல்லாம் பார்த்து, அவரை பல காலமாக கொண்டாடுபவர்களுக்கு விமர்சிக்கும் உரிமை இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் தான் வேதனை புரியும். ஆனால், சரியான புரிதலே இல்லாதவர்கள் எல்லாம் விமர்சிக்கிறார்கள். அதனால் தான் விமர்சிக்க தகுதி வேண்டும் என்று சொன்னேன்.

மணிரத்னம் பற்றி பேசிய பனிந்திரா நார்செட்டிக்கு ஆதரவும் கிடைத்திருக்கிறது, எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. எல்லோருக்கும் மேலானவர்கள் நாம் தான் என நினைக்கும் இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். அதனால், அவருக்கு ஆதரவாக பேச வேண்டாம். ரசிகர்களுக்காகதான் சினிமா எடுக்கிறார்கள் எனவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலரோ, மணிரத்னத்தை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை இல்லை. அதற்கு ஒரு தகுதி வேண்டும். சினிமா பற்றி தெரியாதவர்கள் எல்லாம் விளாசுகிறார்கள் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

movie thug life to 8 vasantalu film director soeech