கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் அப்டேட்ஸ்
‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் தகவல்கள் காண்போம்..
நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உச்ச நடிகையாக வலம் வந்தார். பின்னர் காதல் திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் நுழைந்தார். அந்நிலையில் பாலிவுட்டில் வெளியான் ‘பேபி ஜான்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படத்தை இயக்குனர் அட்லி தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்.,உமன் சென்ட்ரிக் படங்களை அதிகம் நம்பி வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
ஜே.கே. சந்துரு இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், சூப்பர் சுப்புராயன், அஜய் கோஷ், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ரிவால்வர் ரீட்டா படம் வரும் ஆகஸ்ட் 27-ந்தேதி விநாயகர் சதுர்த்தி ரிலீஸாக வெளியாகிறது.
வெளியான இந்த டீசர் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. கடைசியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ரகு தாத்தா’ படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இச்சூழலில் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தை மிகவும் நம்பியுள்ளார். அவரது வெற்றிக்கனவு பலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.