Web Ads

இந்த வாரம், ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

Web Ad 2

வீட்டுக்குள் வந்த நவீன திரையரங்கமாக ஓடிடி தளம் ஓங்குகிறது. அவ்வகையில், இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம்..

ஆர்யன்: பிரவீன்.கே இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த கிரைம்-திரில்லர் திரைப்படம் ‘ஆர்யன்’. இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று ரிலீசாகிறது.

ஆண் பாவம் பொல்லாதது: ரியோ ராஜ் நடிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரிலீசான காமெடி-ரொமான்டிக் திரைப்படம் ‘ஆண் பாவம் பொல்லாதது’. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று ரிலீசாகிறது.

ரேகை: தமிழில் உருவாகியுள்ள கிரைம்-த்ரில்லர் வெப் தொடர் ‘ரேகை’. இத்தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று ரிலீசாகிறது.

தி பெட் டிடெக்டிவ்: அனுபமா நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த காமெடி-திரில்லர் திரைப்படம் தி பெட் டிடெக்டிவ். இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று ரிலீசாகிறது.

மாஸ் ஜதாரா: ரவி தேஜா-ஸ்ரீலீலா நடிப்பில் தெலுங்கில் உருவான ஆக்சன் திரைப்படம் ’மாஸ் ஜதாரா’. இப்படம் தமிழ் உட்பட தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று ரிலீசாகிறது.

சசிவதனே: தெலுங்கில் உருவான ரொமான்டிக் திரைப்படம் ‘சசிவதனே’. இந்த திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் இன்று ரிலீசாகிறது.

ரக்டபீச் 2: திரில்லர் கதைக்களத்தில் உருவான பெங்காலி திரைப்படம் ‘ரக்டபீச் 2’. இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று ரிலீசாகிறது.

கரிமுல்லா பிரியாணி பாயிண்ட்: தெலுங்கில் வெளிவந்த காமெடி திரைப்படம் ‘கரிமுல்லா பிரியாணி பாயிண்ட்’. இப்படம் வரும் 30-ந்தேதி இடிவி வின் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.

பெல் ஏர்: 2022-ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் டீன் ஏஜ் டிராமா வெப் தொடர் ’பெல் ஏர். மூன்று சீசன்களாக ஓடிடி பிரியர்களை ஈர்த்து வரும் இத்தொடரின் 4-வது சீசன் கடந்த 25-ந்தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசானது.

தி கிரேட் பிரீ-வெடிங் ஷோ: ராகுல் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘தி கிரேட் பிரீ வெடிங் ஷோ’. இப்படம் ஜீ5-யில் டிசம்பர் 5 முதல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

தூல்பேட் போலீஸ் ஸ்டேஷன்: ஜஸ்வினி ஜே இயக்கிய திரில்லர் வெப் தொடர் ’தூல்பேட் போலீஸ் ஸ்டேஷன்’ . இத்தொடர் டிசம்பர் 5 முதல் ஆஹாவில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

this week ott release movies
this week ott release movies