ஆயுத பூஜை ஸ்பெஷல் ஆக மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.ஆர்.ஜே பாலாஜி இயக்கியிருந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது இந்த படத்தை சுந்தர் சி இயக்கி வரும் நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா அம்மனாக நடித்து வரும் நிலையில் மேலும் துணியா விஜய், ரெஜினா, யோகி பாபு ,சிங்கம் புலி, இனியா,மைனா நந்தினி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் தற்போது ஆயுத பூஜை ஸ்பெஷல் ஆக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படகுழுவில் உள்ளது அதில் நயன்தாரா அம்மன் வேடத்தில் கையில் சூலத்துடன் அமர்ந்திருப்பது போல் இந்த புகைப்படம் இருக்கிறது.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram