பிக் பாஸில் வைல்ட் கார்டில் நீங்க போறீங்களா.. பதறிக் கொண்டு பதிலளித்த சீரியல் நடிகை ஃபரீனா..!

பிக் பாஸ் போகப் போறீங்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் நடிகை ஃபரீனா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் தற்போது வைல்ட் கார்ட் போட்டியாளராக யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்று பேச்சு இணையத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமான ஃபரீனாவிடம் இதே கேள்வியை கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் பதறி கொண்டு அய்யய்யோ இந்த சீசன் கண்டஸ்டன்ட் கூடவா என பதில் சொல்லியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஃவைல்டு கார்ட் போட்டியாளராக பங்கேற்பதற்கு யாருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்ற கருத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
