தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

Web Ads

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

The news about the shooting of the film Thalaivar 173.. Fans are happy.!
The news about the shooting of the film Thalaivar 173.. Fans are happy.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்க இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அறிக்கையை வெளியிட்டு படத்திலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். அவருக்கு பிறகு இந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் அடுத்ததாக டான் படத்தை இயக்கி பிரபலமான சிபிச் சக்கரவர்த்தி தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது இந்த திரைப்படம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த படத்தில் பிரபலம் மலையாள நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது இது மட்டுமில்லாமல் இது வேடிக்கையான வேடிக்கை நிறைந்த ஒரு குடும்பப் பொழுது போக்க திரைப்படமாக இருக்கும் என்றும் ரஜினிகாந்தின் ஜாலியான பக்கத்தை நாம் பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர் மேலும் அட்லி போன்றே சிபியும் ஒரு நேர்த்தியான தொகுப்பை வழங்குவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

2027 பொங்கல் பண்டிகைக்கு இந்த திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

The news about the shooting of the film Thalaivar 173.. Fans are happy.!
The news about the shooting of the film Thalaivar 173.. Fans are happy.!