இயக்குனர் ஷங்கர் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறைக்கு, நீதிமன்றம் உத்தரவு

இயக்குனர் ஷங்கர் சொத்துகள் மீதான நடவடிக்கையில், நீதிமன்ற விசாரணை பற்றிக் காண்போம்..

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், கலாநிதி மாறன் தயாரிப்பில் வந்த எந்திரன் படம் தனது கதையான ஜூகிபாவை திருடி எந்திரன் படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்து காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்திருந்தார். ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார்

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மாதம் இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக இயக்குனர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷங்கர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், எந்திரன் படத்தின் கதை விவகாரத்தில் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறவில்லை என தெரிவித்தார். எந்திரன் திரைப்படத்தின் கதைக்காக மட்டும் இயக்குனர் ஷங்கர் 11.5 கோடி ரூபாய் ஊதியமாக பெறவில்லையென்றும்,

படத்தின் பல்வேறு பணிகளுக்காகவும் சம்பளமாக 11.5 கோடி ரூபாய் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் தனி நபர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பினர்.

மேலும், புகாரின் இறுதி முடிவுக்காக காத்திருக்காமல் திடீரென நடவடிக்கை எடுத்தது ஏன் எனவும் நீதிபதிகள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர் என்.சிபி விஷ்னு, அமலாக்கத்துறை நடவடிக்கை மூலம் இயக்குனர் ஷங்கருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இந்த வழக்கை அமலாக்கத்துறையிடம் அவர் எதிர்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே வழக்கு விசாரணையின் முடிவில் இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும், மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 21-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதனால், ஷங்கர் சற்று ரிலீஃப் ஆகியுள்ளார்.

the ed action to freeze director shankar assets