Web Ad 2

ராஜமௌலி-மகேஷ்பாபு பட சீன் லீக் ஆனது எப்படி?: படக்குழு டென்ஷன், ஃபேன்ஸ் ஹேப்பி

ராஜமௌலி எடுக்கும் படத்தின் சீன் லீக் ஆகியுள்ளது. இது குறித்த தகவல்கள் காண்போம்..

மகேஷ் பாபு, ராஜமௌலி கூட்டணியில் பிரம்மாண்ட ஆக்‌ஷன் மூவி உருவாகிறது.
தற்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் மலையாள நடிகர் ப்ரித்விராஜ் வில்லனாக நடிக்க, பிரியங்கா சோப்ரா முக்கியமான ரோலில் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து வீடியோ லீக் ஆகியுள்ளது. அதாவது, ஒரு காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்ட இந்த காட்சியில் ஒருத்தர் வீல் சேரில் அமர்ந்திருக்கிறார். சில பிரைவேட் செக்யூரிட்டிஸ் மகேஷ் பாபுவை பிடித்து, அவர் முன்னாடி கூட்டிச்செல்ல, மகேஷ் தனது ஸ்டைலில் நடந்து வருகிறார்.

ஒரு செக்யூரிட்டி அவரை கீழே உட்கார வைத்து, கையை பின்னாடி கட்ட சொல்கிறார் வீல் சேரில் இருப்பவர். அவர்தான் ப்ரித்விராஜ் என சொல்லப்படுகிறது.

இவர்கள் இருவரும் முதல் முறையாக சந்திப்பது, வில்லன் பரித்வி மிரட்டுவது, மகேஷின் மாஸ் லுக் என வேற லெவலாய் தெறிக்கிறது. ஆர்.ஆர் மிக்ஸிங்ல எந்த ரேஞ்சுக்கு இருக்கும்னு புரிஞ்சுக்கலாம். இந்த லீக் வீடியோ படக்குழுவை கஷ்டப்படுத்தினாலும், மகேஷ் பாபு ஃபேன்ஸ் காலரை தூக்கி விடுற மாதிரி இருக்கு என வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ லீக் ஆனதால் ராஜமௌலி மிக கோபமடைந்துள்ளார். மேலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது. தற்போது ஒடிசாவில் ஷூட்டிங் நடைபெறுகிறது. அடுத்த கட்ட ஷூட் ஆப்பிரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

mahesh babu ssmb 29 film scenes leaked reaction the team