Web Ads

‘வடசென்னை-2’ படத்தில் தனுஷுக்கு பதிலாக மணிகண்டனா?

தற்போது ‘வடசென்னை-2’ படம் பற்றி பரபரப்பாக பரவும் தகவல் காண்போம்..

தனுஷ் நடித்து வெளியான ‘வடசென்னை’ படம் முடியும்போது, அதன் 2-ம் பாகத்துக்கு லீடு கொடுத்து முடித்திருந்தார் வெற்றிமாறன். அவ்வகையில், 2-ம் பாகம் தனுஷ் நடித்த “அன்பு” கேரக்டரின் எழுச்சியாக அமையும் என கூறப்பட்டது

மேலும், 2-ம் பாகத்திற்கான பாதி படப்பிடிப்பை 2018-ம் ஆண்டிலேயே வெற்றிமாறன் முடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், தனுஷ் ஃபேன்ஸ் அடிக்கடி கேட்பதும், அதற்கு வெற்றிமாறன் ‘விரைவில் வரும்’ என சொல்வதும் தொடர்கிறது.

இச்சூழலில், தனுஷ் – வெற்றிமாறன் இருவரும் அடுத்தடுத்த படங்களில் செம பிஸியான நிலை. இதனால் ‘வடசென்னை- 2’ படத்தில் இருந்து இருவருமே வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

வெற்றிமாறனுக்கு பதிலாக அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் வட சென்னை 2 படத்தை இயக்க உள்ளதாகவும், தனுஷுக்கு பதில் நடிகர் மணிகண்டனை வைத்து ‘வடசென்னை 2’ படத்தை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

இது குறித்து இயக்குனர் வெற்றிமாறனோ அல்லது தனுஷோ மௌனம் கலைத்தால் ரசிகர்களுக்கு தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

dhanush out manikandan roped in for vadachennai 2