Thalapathy Vijay

Thalapathy Vijay : வருமான வரி சோதனை வந்துடும்னு விஜய்க்கு பயம் என்பது போல சீமான் பேசி இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் சர்கார் படத்தில் அரசியல் வசனங்கள் பேசி இருந்ததும், அரசியல் சம்மந்தமான காட்சிகள் இடம் பெற்று இருந்ததும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

விஸ்வாசம் வெற்றியா? தோல்வியா? – உண்மையை போட்டுடைத்த வெளியீட்டு நிறுவனம்.!

அதன் பின்னர் படத்தில் இருந்து சம்மந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டன. இது குறித்து நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் நீயெல்லாம் என் தம்பியே இல்லை.

சிம்பு தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறி விஜயை மோசமாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் விஜயை சீண்டுவது போல கருத்து தெரிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னுடன் இணைந்து பணியாற்றினால் வருமான வரி சோதனை வந்துடும்னு பயப்படுறாங்க என கூற விஜயும் பயப்படுகிறாரா? என செய்தியாளர் ஒருவர் கேட்டுள்ளார்.

உரசி பார்க்காத.. சீமானை விளாசும் தளபதியின் குட்டி ரசிகன் – வைரலாகும் வீடியோ.!

அதற்கு சீமான் அதை அவர் கிட்ட தான் நீங்க கேட்கணும் என பதில் கூறியுள்ளார். சீமான் விஜய்க்காக எழுதி உள்ள பகலவன் என்ற படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.