Viswasam Status

Viswasam Status : விஸ்வாசம் படம் வெற்றியா? தோல்வியா? என படத்தை வெளியிட்ட விநியோகிஸ்த நிறுவனமான KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து இருந்தார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்த இந்த படத்தை தமிழகத்தில் KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

படம் வெளியானதில் இருந்தே தற்போது வரை செம மாஸான வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. இருப்பினும் படத்தின் வசூல் நிலவரங்கள் பொய்யானது.

விஸ்வாசம் திரைப்படம் நன்றாக இல்லை என சமூக வளையதளங்களில் ஒரு சிலர் பேசி வருகின்றனர். இந்நிலையில் தற்போது KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் விஸ்வாசம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் என குறிப்பிட்டு போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த வெற்றி ரசிகர்களாகிய உங்களால் தான் சாத்தியம் எனவும் கூறியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.