thalapathy vijay new record in tamilnadu
thalapathy vijay new record in tamilnadu

தமிழகத்தில் விஜய் சாதனை படைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகி பாபு, போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாயிரம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் என்றே சொல்லலாம். உலக அளவில் இந்தப் படம் 440 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் மட்டும் 200 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது மட்டும் இல்லாமல் இவரது நடிப்பில் வெளியான லியோ தமிழகத்தில் மட்டும் 230 கோடி வசூல் செய்துள்ளதால் ஒரே நடிகரின் படம் தமிழகத்தில் இரண்டு முறை 200 கோடியை தாண்டி உள்ள சாதனையை விஜய் படைத்துள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.