கோபி பிளானில் பாக்கியா சிக்குவாரா என்பதை பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா டான்ஸ் கம்பெட்டிஷனில் கலந்து கொள்கிறார். எழிலை காலேஜுக்கு வர சொல்லி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷயத்தை சொல்லுகிறார். எழில் சந்தோஷப்பட ஆனால் இந்த விஷயத்தை வீட்ல இருக்குற யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் நானே செலக்ட் ஆயிட்டு சொல்றேன் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி ஆட்டோவில் வந்து இறங்குகிறார். பாட்டியிடம் இந்த விஷயத்தை சொல்லாதனா என்று இனியா சொல்லி விடுகிறார்.
ஈஸ்வரி வந்தவுடன் நீ ஏன் இங்கு வந்திருக்க என்று கேட்க இல்ல அப்படியே வந்த காலேஜ் வச்சு டைம் ஆயிடுச்சு அதனால பாத்துட்டு போலாம்னு வந்தேன் என்று சொல்லிவிட்டு, ஒரு காபி ஷாப் போகலாம் என்று கூப்பிட முதலில் வர மறுக்கும் ஈஸ்வரி, பிறகு சம்மதிக்கிறார். காபி ஷாப்புக்கு மூணு பேரும் செல்ல அங்கே எழில் இந்த இடத்துல காபி சூப்பரா இருக்கும் இனியா என்று சொல்லுகிறார். அதற்கு இனியா அம்மா போடுற காபியை விடவா என்று கேட்க அம்மா போன்ற காபி கிட்ட எதுவும் கிட்ட வர முடியாது அதுக்கு அப்புறமா இந்த காபி என்று சொல்லுகிறார்.
ஸ்னாக்ஸ் என்ன ஆர்டர் பண்ணலாம் என்று கேட்க ஈஸ்வரியிடம் உங்களுக்கு சாண்ட்விச் பிடிக்கும்ல அது ஆர்டர் பண்ணவா என்று சொல்ல என்னை விட உங்க தாத்தாவுக்கு தான் ரொம்ப புடிக்கும் என்று சொல்லுகிறார். அப்போ சாண்ட்விச் வேணாம் என்று முடிவு செய்து இனியாவிற்கு பன்னீர் பப்ஸ் மற்றும் இவருக்கு கட்லட் ஆர்டர் செய்ய உங்களுக்கும் கட்லெட் ஆர்டர் செய்யவா பாட்டி என்று கேட்க இல்லை எனக்கு சாண்ட்விச் என்று சொல்ல எழில் ஆர்டர் செய்கிறார்.
தாத்தாவோட ஞாபகம் உங்களுக்கு வரக்கூடாதுன்னு தான் சாண்ட்விச் வேணாம்னு சொன்னேன் அப்படின்னு எழில் சொல்ல அதற்கு ஈஸ்வரி அவருக்கு புடிச்சத சாப்பிடலன்னா அவருடன் நினைப்பு என்ன விட்டு போயிடுமா என்று சொல்லுகிறார். அவரோட நினைப்பு என்ன விட்டு எப்பயும் போகாது என்று சொல்லுகிறார்.
எழில் ஈஸ்வரியை பார்த்துக் கொண்டிருக்க என்னடா பாக்குற என்று கேட்க இல்ல பாட்டி தாத்தா இறந்ததுக்கு அப்புறம் நீங்க அதிலிருந்து எப்படி வெளியே வருவீங்கன்னு நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன் ஆனா நீங்க ரொம்ப சீக்கிரமாவே அதிலிருந்து வெளியே வந்து நார்மல் ஆயிட்டீங்க அது எங்களுக்கு ரொம்ப நிம்மதியா தருது என்று சொல்லுகிறார். உங்க தாத்தா சாகுற வரைக்கும் இந்த குடும்ப சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சாரு. நான் வருத்தப்பட்டு கிட்டு உக்காந்துட்டா பாக்கியா உட்கார்ந்திருவா அப்புறம் இந்த வீடு யார் பார்க்கிறது.
செழியன் வேலைக்கு போறான் இனிய காலேஜுக்கு போற ஜெனி வயித்துல குழந்தையை வைத்திருக்கிறாய் பாக்யா ரெஸ்டாரன்ட் போறா என்னால இவங்க எல்லாரும் பாதிக்கப்படுவாங்க. அவருக்கு அப்புறம் நான் தான் இந்த குடும்பத்தை சந்தோஷமா பார்த்துக்கணும் இல்லன்னா அங்கிருந்து என்ன அவரு என்ன திட்டுவாரு என்று சொல்லுகிறார்.
வீட்டுக்கு வந்த ஈஸ்வரி டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டிருக்க ஜெனி அவருக்கு மாத்திரை கொடுக்கிறார். பிறகு பாக்கியா பத்து நிமிஷத்துல சாப்பிடலாம் என்று சொல்ல எல்லாரும் வந்துட்டோம் பாக்யா என்று சொல்லுகிறார் அதற்கு செல்வி எல்லோருமே யாருமா இருக்காங்க செழியன் மற்றும் இனியா தான் என்று சொல்லுகிறார். இதனால் மீண்டும் ஈஸ்வரி வருத்தப்பட்டு பேசுகிறார். பாக்கியாவிற்கு ஃபோன் வர நாளைக்கு ரெஸ்டாரன்ட் இருக்கு வர சொல்லுகிறார் என்ன போன் என்று செல்வி கேட்க செப் விளம்பரம் கொடுத்ததற்கு போன் பண்ணி இருந்தாங்க என்று சொல்ல ஈஸ்வரி எதுக்கு என்று கேட்கிறார் எனக்கு கிச்சன்லையே வேலை சரியா இருக்கு உங்க கூட என்னால இருக்க முடியல என்று சொல்ல ஈஸ்வரி எங்களுக்கு என்ன யாராவது ஒருத்தர் என் கூட இருந்துகிட்டு தான் இருப்பாங்க நீ உன்னோட வேலைய பாரு என்று பாக்யாவிடம் சொல்லுகிறார். ஆனால் செல்வி கிச்சன்குள்ள காலையில போனா நைட் வரைக்கும் ஓயாமல் வேலை பார்த்துகிட்டு கிடக்கு ஆனால் செஃப் இருந்தா அக்காவுக்கும் கொஞ்சம் ஈஸியா இருக்கும் இல்ல என்று சொல்ல ஈஸ்வரி அப்படினா தாராளமா வச்சுக்கோ பாக்யா என்று சொல்லுகிறார் சரிங்க அத்தை என்று சொல்லு ஜெனி அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லுகிறார்.
மறுபக்கம் கோபியில் கிச்சனுக்கு ஆர்டர்கள் குவிய அவரது நண்பர் செந்தில் என்னடா ரொம்ப பிசியா என்று கேட்க ஆமா செந்தில் ஒன் வீக்கா நிறைய ஆடர் வருது பெரிய லாபம் கிடைக்குது என்று சந்தோசமாக பேசுகிறார். தெரியாத ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி அதுல லாபம் கொடுக்கிறது பெரிய விஷயம் டா என்று கோபியை பாராட்ட ஆமா பிசினஸ் என்னன்னு தெரியாதவங்க எல்லாம் பண்ணும்போது, நான் எம்பிஏ படிச்சு பிசினஸ்காகவே இருக்கிறனா லாபம் பார்க்க மாட்டேன்னா என்று பேச, செந்தில் உடனே நீ பாக்யாவ பத்தி பேச ஆரம்பிச்சிட்டியா அவங்க முன்னேறிக்கிட்டே தான் போவாங்க இங்க பாரு செப்க்கு விளம்பரம் கொடுத்திருக்காங்க என்று சொல்ல 5000 பேருக்கு கூட செஞ்சுடுவா அவ எதுக்கு செப்புக்கு விளம்பரம் கொடுக்கணும் என்று சொல்ல, அறிவாளி எம்பிஏ அவங்க பிசினஸ் டெவலப் பண்றாங்க என்று சொல்லுகிறார் செந்தில்.
உடனே கோபமான கோபி என்ன முடிவு எடுக்கிறார்? பாக்யாவை தோற்கடிக்க போடும் பிளான் என்ன? அதற்கு செந்தில் என்ன சொல்லப் போகிறார்?என்று இன்றைய எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.