வேட்டையன் படத்தின் கதை தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
த.செ ஞானவேல் இயக்கத்திலும்,லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி ,மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் கதை என்னவென்றால், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருப்பவர் ரஜினி என்றும்,ஒரு மர்டர் கேஸில் இருக்கும் ஒருவரை சுட்ட பிறகு ஏதோ தப்பான விஷயம் இருப்பதை உணர்கிறார். அதற்காக நீதி வாங்கித் தரும் போராட்டமாக இந்த கதை இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.