வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் படத்தின் தலைப்பு குறித்து தகவல் ஒன்று இணையத்தில் போஸ்டரோடு வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay in Karudan Movie Poster : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா-சூரசம்ஹாரம் : பக்தர்களுக்கு அனுமதி?

இதனை தொடர்ந்து இவர் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. மேலும் தளபதி விஜய் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க பச்சைக்கொடி காட்டி இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இவர்கள் இணையும் படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு கருடன் என தலைப்பு வைத்திருப்பது போல போஸ்டர் ஒன்றில் சமூக வலைதள பக்கங்களில் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த கூட்டணி இணைவது மட்டும் உறுதி ஆனால் படம் வேற லெவலில் இருக்கும் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அஜித் படத்தையும் இப்படி தான் சொன்னாங்க! – Annaatthe Trailer Reaction | Rajinikanth, Nayanthara | HD