Thalapathy Vijay Gift to Lokesh
Thalapathy Vijay Gift to Lokesh

மாஸ்டர் படத்தை பார்த்து மிரண்டு போன தளபதிகள் லோகேஷ் கனகராஜ்க்கு மறக்க முடியாத கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.

Thalapathy Vijay Gift to Lokesh : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன், தீனா, பிரேம் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

மொத்த விஜய் ரசிகர்களும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் தளபதி விஜய் முழு படத்தையும் பார்த்து மிரண்டு போய் உள்ளார்.

லோகேஷ் கனகராஜின் அடுத்த ஹீரோ ரஜினி இல்லையா? வெளியான

படம் பார்த்து மகிழ்ச்சியான தளபதி விஜய் லோகேஷ் கனகராஜை கட்டி அணைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மறக்க முடியாத கிப்ட்டாக தன்னுடைய இன்னொரு படத்தை இயக்கும் வாய்ப்பையும் லோகேஷ் கனகராஜ்க்கு கொடுத்துள்ளார். இதனால் தளபதி 66 படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆர் முருகதாஸ் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.