Lokesh Kanagaraj Next Movie Details

லோகேஷ் கனகராஜ் அடுத்த ஹீரோ யார் என்பது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Lokesh Kanagaraj Next Movie Details : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக தடம் பதித்து இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் கைதி ஆகிய படங்களின் மூலமாக இயக்குனரான இவர் தற்போது தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதன் பின்னர் ரஜினியின் படத்தை நிராகரித்து விட்டதாகவும் இதனால் ரஜினிக்கு பதில் கமல் ஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

பிறகு மீண்டும் ரஜினிதான் நடிக்கிறார் கமல் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கிறார் என தகவல்கள் பரவியது. இதன் நிலையில் தற்போது ரஜினியும் இல்லை, கமலும் இல்லை லோகேஷ் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் தடம் பதிக்கிறார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் என்னையா இது? லோகேஷின் அடுத்த ஹூரோ யார்? என புலம்ப தொடங்கியுள்ளனர்.