நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தில் தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் பாடல் இடம் பெற்றிருக்கும் காமெடி வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் “பிரின்ஸ்” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் இடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் சில நெகட்டிவ் கமெண்ட்ஸ்களையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு சீனில் தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையமைத்திருக்கும் பிரபல பாடலான ‘அரபிக் குத்துப்’ பாடலை வைத்து ஒரு காமெடி சீன் இடம் பெற்றிருக்கிறது. அந்த வீடியோ மட்டும் தற்போது இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது.