மிரட்டலாக இருக்கும் தளபதி 69 படத்தின் டைட்டில்.. தெறிக்க விடும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

thalapathy 69 movie first look poster

thalapathy 69 movie first look poster

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார்.Hவினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, கௌதம் மேனன், பாபி தியோல் , பிரகாஷ் ராஜ், பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இது மட்டும் இல்லாமல் தளபதி 69 படத்தின் டைட்டில் குடியரசு தினமான இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் தெறிக்க விடும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் “ஜனநாயகன்” என்ற டைட்டிலையும் அறிவித்துள்ளனர்.

இந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.