Thalapathy 63 overseas rights sold out
Thalapathy 63 overseas rights sold out

Thalapathy 63 overseas rights sold outதளபதி 63 படத்தின் ஓவர்சீஸ் உரிமமும் பிரம்மாண்ட தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷங்கர்; இந்தியன் 2 ரிலீஸ் தேதி இதோ!

இப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. அதற்குள் இப்படத்தின் வியாபாரம் படு ஜோராக நடந்தது வருகிறதாம். முன்னதாக இப்படத்தின் சேட்டிலைட் மிகப்பெரிய விலைக்கு விற்றுத்தீர்ந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஓவர்சீஸ் உரிமமும் பிரம்மாண்ட தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாம்