Indian 2 release on Pongal 2021
Indian 2 release on Pongal 2021

Indian 2 release on Pongal 2021 – 2021-ம் ஆண்டு இந்தியன் 2 படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இதனால் கமலுக்கும் ஷங்கருக்கும் சண்டை என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

தர்பாரிலும் தொடரும் ரஜினியின் மாஸ் சென்டிமென்ட் – இந்த முறையும் ஹிட் கிடைக்குமா?

மேலும் இந்தியன் 2 படம் டிராப் என்றும் இப்படத்தை இந்தியில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதை படக்குழு மறுத்துள்ளனர்.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படத்தை ஜூன் மாதம் துவங்க படக்குழு தயாராகி வருகிறார்களாம்.

படம் சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டுவிட்டதாம். மேலும் 2021-ம் ஆண்டு இப்படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

YouTube video