பாண்டிராஜ், மிஷ்கின், பூரி ஜெகன்நாத் ஆகியோர் இயக்கத்தில் விஜய் சேதுபதி..
விஜய் சேதுபதி நடிக்கும் படங்களின் அப்டேட்ஸ் பார்ப்போம்..
விஜய் சேதுபதி நடிப்பில் ஆறுமுக குமார் இயக்கத்தில் வெளியான ‘ஏஸ்’ படம் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதயின் 52-வது நடபடமாக ‘தலைவன் தலைவி’ படம் ரிலீசாக இருக்கிறது.
இப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள அப்டேட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. ‘கிராமத்து கதைக்களத்தில் படம் இயக்குவதற்கு பெயர் பெற்ற பாண்டிராஜ் இயக்கத்தில் ‘தலைவன் தலைவி’ உருவாகியுள்ளது. இப்படம் வரும் ஜுலை 25-ம் தேதி ரிலீசாக உள்ளது.
நித்யா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, சரவணன், செம்பியன் வினோத், மைனா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
முன்னதாக வெளியான டீசரில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவரும் வாக்குவாதம் செய்து சண்டை போடுவதை போன்ற காட்சிகள் இடம்பெற்று வரவேற்பினை பெற்றிருந்தது. ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை இயக்கி வெற்றி பெற்ற பாண்டிராஜ், இப்படத்தையும் வெற்றிப்படமாக அமைத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையில், மிஷ்கின் இயக்கத்தில் ‘ட்ரெய்ன்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார் விஜய் சேதுபதி. கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு’ 2-ம் பாகத்திலும் விஜய் சேதுபதி முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். மேலும், பூரி ஜெகந்நாத் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.
