Tamilnadu New Govt Buses : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Govt Buses, Chennai

Tamilnadu New Govt Buses :

சென்னை : சென்னையில் சுமார் ரூ.154 கோடி மதிப்பிலான புதிய 500 அரசு பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் சுமார் ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் 15 பேருந்துகள் கிளாசிக் எனப்படும் கழிவறை வசதி கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

காசோலை மோசடி வழக்கு.. முன்னாள் எம்.பி. அன்பரசுக்கு 2 ஆண்டுகள் சிறை.!

போக்குவரத்து கழகங்கள் வாரியாக சென்னை 235, விரைவு போக்குவரத்து கழகம் – 118, விழுப்புரம் -18, சேலம் – 60, கோவை – 16, கும்பகோணம் – 25, மதுரை – 14, நெல்லை – 14 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேருந்தின் இருபுறமும் சிறப்பு அம்சமாக அவசர கால வழிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளின் வசதிக்காக தனித்தனி இருக்கைகள் மற்றும் பயணிகள் நின்று பயணிக்க ஏதுவாக அகலமான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, பயணிகள் இருக்கும் இடத்தை அறிவிக்கும் ஒலிபெருக்கி வசதிகள், மற்றும் பயணிகள் வழித்தடத்தினை அறிந்து கொள்ள ஏதுவாக, மின்னணு வழித்தட பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பல வசதிகளுடன் கூடிய 500 புதிய அரசு பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

மேலும் பேருந்துகளில் படுக்கை வசதி இருக்கை மற்றும் கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.