MP Anbarasu in cheque bounce case : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Political News, Tamil nadu

MP Anbarasu in cheque bounce case :

சென்னை: காசோலை மோசடி வழக்கில் முன்னாள் எம்.பி. அன்பரசுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் தண்டனை உறுதி செய்யப்பட்ட அன்பரசு, மணி இருவரையும் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளைக்காக 2002-ஆம் ஆண்டில் பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவிடம் சுமார் ரூ35 லட்சம் கடன் வாங்கியிருந்தார் முன்னாள் எம்.பி. அன்பரசு.

csk வெறும் அணி மட்டும் இல்லை அது ஒரு குடும்பம் – சென்னை ரசிகர்கள் நெகிழ்ச்சி

ஆனால் அன்பரசு கொடுத்த காசோலைகள் பணம் இல்லாததால் திரும்பிவிட்டன. இது தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் முகுந்த்சந்த் போத்ரா வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2015-ஆம் ஆண்டு அன்பரசு, அவரது மனைவி கமலா, அறக்கட்டளை நிர்வாகி மணி ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இத்தண்டனையை எதிர்த்து அன்பரசு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் கூடுதல் அமர்வு நீதிமன்றம் அன்பரசு உள்ளிட்டோருக்கான சிறை தண்டனையை உறுதி செய்தது.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பரசு மீண்டும் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ” அன்பரசுவின் மனைவி கமலா காலமாகிவிட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கைவிடப்படுகிறது.

மேலும் அன்பரசு, மணி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படுகிறது. எனவே 2 பேரையும் சிறையில் அடைக்க வேண்டும்! “என அவர்களது தண்டனையை உறுதி செய்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.