ரெட்ரோ படத்தின் லாபத்தில் சூர்யா செய்த செயல், குவியும் வாழ்த்து..!
ரெட்ரோ படத்தின் லாபத்தில் சூர்யா செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ் ,நாசர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தத் திரைப்படம் மே ஒன்றாம் தேதி வெளியான நிலையில் தற்போது 7 நாட்கள் முடிந்த நிலையில் உலக அளவில் 87 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இந்தப் படம் லாபம் பெற்று வெற்றி அடைந்துள்ளதால் லாபத்தில் இருந்து பத்து கோடியை அகரம் அரக்கட்டளைக்கு நன்கொடையாக சூர்யா கொடுத்துள்ளார். இவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

