Pushpa 2

ஜோதிகா, என்னை விட மூன்று மடங்கு சம்பளம் வாங்கினார்: தீரா காதலுடன் சூர்யா ஸ்பீச்..

இந்திய அளவில் செல்லும் இடமெல்லாம் தற்போது, ஜோதிகா புராணம் பாடி வருகிறார் சூர்யா. இது குறித்த காதல் சமாச்சாரம் பார்ப்போம்..

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் கங்குவா படம் வரும் வியாழக்கிழமை அதாவது 14-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில், கங்குவா படத்தை பல்வேறு மாநிலங்களில் விளம்பரம் செய்து வருகிறார் சூர்யா. அப்படியான சூழ்நிலையில், செல்லும் இடமெல்லாம் தன் காதல் மனைவி ஜோதிகா பற்றியே பேசி வருகிறார் சூர்யா. ஜோதிகா பற்றி சூர்யா கூறியதாவது,

‘தன் முதல் தமிழ் படத்தில் என்னுடன் சேர்ந்து நடித்தார் ஜோதிகா. இந்தியில் டோலி சஜா கே ரக்னாவுக்கு பிறகு, தமிழ் படத்தில் நடித்தார். எனக்கு தமிழ் தெரியும். நான் ஒரு நடிகரின் மகன். ஆனால் வசனத்தை மறந்து தடுமாறினேன். எனக்கு நடிக்கத் தெரியவில்லை. அது என் மூன்றாவது அல்லது நான்காவது படம்.

ஆனால், ஜோதிகாவோ என்னை விட சிறப்பாக வசனம் பேசினார். ரொம்ப சின்சியராக இருந்தார்.குறிப்பாக, தமிழ் திரையுலகில் விரைவில் வெற்றி பெற்றார் ஜோதிகா.

ஆனால், எனக்கு 5 ஆண்டுகள் ஆனது. நான் ஒரு ஹீரோ, எனக்கு ஒரு மார்க்கெட் இருக்கிறது என்று சொல்ல சில காலம் எடுத்தது.

‘காக்க காக்க’ படத்தில் என்னை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கினார் ஜோதிகா. என் வாழ்க்கையின் ஒரு பங்காக இருக்க அவர் சம்மதித்தார். அவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தார்கள்.

அந்த நேரத்தில் நான் என்ன சம்பாதித்தேன். ஜோதிகா என்ன சம்பாதித்தார் என உணர்ந்தேன். அவருக்கு சமமாக வர கடினமாக உழைக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். அவரை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என விரும்பினேன். எல்லாமே நடந்தது.

ஜோதிகாவின் பெற்றோர் மும்பையில் இருக்கிறார்கள். அவர்களுடன் நேரம் செலவிடவே மும்பைக்கு மாறினோம்’ என்றார் தீரா காதலுடன் சூர்யா.

suriya cant stop praising wife jyothika