பிரச்சாரத்தில் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? விஜய் குறித்த கேள்விக்கு ரஜினியின் சிம்பிள் பதில்..!

பிரச்சாரத்தில் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா என்ற கேள்விக்கு ரஜினி சிம்பிளாக பதில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில்முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது ஜனநாயகன் என்ற படத்தின் நடித்து வருகிறார் இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி தற்போது அரசியலில் முழுவதுமாக ஈடுபட்டு வருகிறார் ஏற்கனவே இரண்டு மாநாடுகள் பிரம்மாண்டமாக நடந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமீபத்தில் திருச்சியில் பிரச்சாரத்தையும் தொடங்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.
இந்த நிலையில் விமான நிலையத்தில் ரஜினிகாந்தை சந்தித்தபோது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் பிரச்சாரத்திற்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்று கேட்க ரஜினி ஒரே வார்த்தையில் “நோ கமெண்ட்ஸ்” என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
