Super Deluxe Secrets

Super Deluxe Collection : முதல் நாளிலேயே சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வசூலில் தாறுமாறாக வேட்டையாடி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து மிரட்டியுள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.

விஜய் மனசு யாருக்கு வரும்? தளபதி 63 குறித்து வெளியான அதிரடி தகவல்.!

நேற்று உலகம் முழுவதும் வெளியான இப்படத்தில் சமந்தா, பஹத் பாஷில், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் இணைந்து நடித்திருந்தனர்.

விஜய் சேதுபதி முதல் முறையாக திருநங்கை வேடத்தில் துணிந்து நடித்திருந்ததால் படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படியே படம் சூப்பராக அமைந்துள்ளதால் முதல் நாள் வசூலும் மாஸ் காட்டியுள்ளது.

விஜய் சேதுபதியை காப்பி அடித்த சிவா – அடுத்த பட டைட்டிலை பாருங்க.!

ஆம், இப்படம் சென்னையில் மட்டும் ரூ 45 லட்சமும் தமிழகம் முழுவதும் சேர்த்து கிட்டதட்ட ரூ 3 கோடியும் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.