ரஜினி-கமல்-ஸ்ரீதேவியின் காதல்: குட்டி பத்மினி பேச்சு வைரல்..

Web Ads

ஸ்ரீதேவியை போன்றே குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த குட்டி பத்மினி பேசிய வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர் கூறியதாவது;

‘கமல் சாருடன் சேர்ந்து தொடர்ந்து நிறைய படத்தில் நடித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீதேவி. அந்த நேரத்தில் ஒரு படத்தில் கமல் சார் ஹீரோ. நானும், ஸ்ரீதேவியும் ஹீரோயின்கள். ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்தது.

அந்த நேரத்தில் ஸ்ரீதேவிக்கு கமல் சார் மீது ரொம்ப அன்பு, ஆசை இருந்தது. சின்ன வயதில் எல்லோருக்கும் வரும் ஈர்ப்பு என்று கூட சொல்லலாம்.

அப்பொழுது பாம்பேயில் இருந்து ரேகா வந்தாங்க. அவருக்கும், கமல் சாருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி அவங்களை பற்றி நிறைய கிசுகிசுக்கள் போய்க் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஸ்ரீதேவிக்கு ஒரே ஃபீலிங், எமோஷனலாக டவுனாக இருந்தாள்.

சும்மா இருடி, அவர் வாணி கணபதியை தான் கல்யாணம் பண்ணப் போகிறார். எனக்கு நல்லா தெரியும். வாணியை தான் கல்யாணம் பண்ணுவார். மத்த எல்லோருக்கும் டேக்கா கொடுத்துடுவார்னு நான் சொல்லிக்கிட்டே இருப்பேன். அந்த டைம்ல கமல் சாரை காதலிக்காத ஹீரோயின்ஸே இல்லை என்று சொல்லலாம்.

ஸ்ரீக்கு ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்க நிறைய படங்கள் கிடைத்தது. ரஜினி சாருக்கு ஸ்ரீதேவி மீது ரொம்ப பிரியம். ஏனென்றால் அவர் ரொம்ப க்யூட்டா இருப்பா, அதிர்ந்து பேசவே மாட்டா. சினிமா நடிகைகளில் யாரிடமும் அதிர்ந்து பேசாத நடிகை ஸ்ரீதேவி. அவ பேசுவதே கேட்காது’ என தெரிவித்துள்ளார்.

sridevi had a huge crush on kamal haasan kutty padmini
sridevi had a huge crush on kamal haasan kutty padmini