எனது வீட்டை பள்ளியாக மாற்றி, இலவசக்கல்வி கொடுக்க திட்டம்: ராகவா லாரன்ஸ் முடிவு

தமிழ் சினிமாவில் முனி, கஞ்சனா 2, காஞ்சனா 3 என திரில்லர் படங்களில் நடித்துள் ராகவா லாரன்ஸ், தற்போது காஞ்சனா- 4 படத்தில் நடிக்கிறார். சினிமா தவிர்த்து தன்னால் முடிந்தளவிற்கு லாரன்ஸ் டிரஸ்ட் மூலமாக ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வருகிறார்.
இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அதில், காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. எப்போதும் படத்திற்கு அட்வான்ஸ் வாங்கினால், அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒரு நல்ல காரியத்திற்கு எடுத்து வைத்துக் கொள்வேன்.
குரூப் டான்ஸராக இருக்கும்போது வாங்கிய சம்பளத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மிச்சப்படுத்தி அதனை அம்மாவிடம் கொடுத்து அப்படி வந்த பணத்தில் வாங்கிய நிலத்தில் கட்டிய வீடு தான் இந்த வீடு.
முதல் முறையாக நான் கட்டிய வீடு. இந்த வீட்டை பசங்களுக்கு கொடுத்துவிட்டு, நாம் வாடகை வீட்டிற்கு சென்றுவிடலாமா என்று அம்மாவிடம் கேட்டு அப்படி நாங்கள் கொடுத்த இந்த வீட்டை இப்போது நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தப் போகிறோம். 20 வருடங்களுக்கு முன்பு கொடுத்த இந்த வீட்டை வந்து பார்க்கும்போது ஒரு விதமான உணர்வு தோன்றுகிறது.
எத்தனை பசங்க, இங்கு படித்தார்கள், சாப்பிட்டார்கள், இலவசமாக நாம் என்னென்னவோ கொடுக்கிறோம். அதோடு கல்வியை இலவசமாக கொடுப்பது தான் சரியாக இருக்கும் என்று தோன்றியது.
அதனால் நான் கட்டிய இந்த வீட்டை கொஞ்சம் மாற்றம் செய்து இலவச கல்வி கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதற்காக இந்த வீட்டில் நான் வளர்த்த பெண் இப்போது டீச்சராகி இருக்கிறார்கள். இப்போ அவர்கள் தான் நான் கட்டப் போகும் பள்ளியின் முதல் டீச்சர். காஞ்சனா 4 படத்திற்கு அட்வான்ஸ் வாங்கி இந்த வீட்டை தரமான கல்வி கொடுக்கும் ஒரு பள்ளிக்கூடமாக மாற்றப் போகிறேன் என கூறியுள்ளார்.
