ஐஸ்வர்யா லட்சுமியை பாராட்டிய நடிகர் சூரி.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

Web Ads

ஐஸ்வர்யா லட்சுமியை பாராட்டி பதிவு வெளியிட்டு உள்ளார் சூரி.

Soori has released a post praising Aishwarya Lakshmi
Soori has released a post praising Aishwarya Lakshmi

தமிழ் சினிமாவில் காமெடியனாக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்,அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

இந்தப் படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். தாய்மாமன் உறவை ஆழமாக உணர்த்தும் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்தத் திரைப்படம் இருந்ததில் எந்த சந்தேகமும் கிடையாது.

இந்த நிலையில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி குறித்து சூரி சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது ஐஸ்வர்யா லக்ஷ்மி இந்த படத்துக்கு பெரிய ஆதரவாக இருந்தார். உண்மையில் டாக்டராக இருப்பதால் திரையில் டாக்டர் கதாபாத்திரத்தை நம்பிக்கையிடனும் இயல்பான முறையிலும் சிறப்பாக செய்திருக்கிறார்.படத்தில் முக்கியமான சில காட்சிகளை முழுக்க அவர் தாங்கி சென்றார் அவருடைய நேர்மை மற்றும் நல்ல மனசு அவரை இன்னும் உயரம் நோக்கி கொண்டு செல்லும்.

படத்தை புரொமோட் செய்யவும்,முழு முயற்சியுடன் ஈடுபட்டதுக்கும் ஐஸ்வர்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Actor Soori (@soorimuthuchamy)