குழந்தைகளின் முகத்தை வெளியிட்ட சினேகன் கன்னிகா தம்பதி.. அழகிய குடும்ப புகைப்படம் இதோ.!!

குழந்தைகளின் முகத்தை கன்னிகா சினேகன் தம்பதியினர் முதல்முறையாக வெளியிட்டுள்ளனர்.

Snegan Kanika couple who released their baby's faces
Snegan Kanika couple who released their baby’s faces

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பிரபலமானவர் கவிஞர் சினேகன். இவர் தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகை கன்னிகா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சமீபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்தது. இந்த குழந்தைகளுக்கு கமல்ஹாசன் அவர்கள் காதல் கவிதை என பெயர் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுவரை குழந்தைகளின் முகத்தை காட்டாமல் இருந்த இவர்கள் தற்போது புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கும் திரையுலக உறவுகளுக்கும் வணக்கம் எங்கள் இரட்டை மகள்கள் காதல் கன்னிகா சினேகன், கவிதை கன்னிகா சினேகன், இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும் நன்றி என்றும் நட்புடன் சினேகன், கன்னிகா சினேகன் என்று பதிவிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Cineulagam (@cineulagamweb)