Pushpa 2

ஸ்லம்டாக் மில்லியனர்-2 ஹாலிவுட் படம் ஸ்டார்ட்: மீண்டும் ஆஸ்கர் விருதுகளை அள்ளுமா?

இந்திய வாழ்வியலை, கதையின் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரிய ஹாலிவுட் சினிமா ஸ்லம்டாக் மில்லியனர். இப்படம், உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

படம், இந்தியாவின் கான் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியை ஒட்டி, மும்பை தாராவியில் வாழும் மக்களின் கதையை உணர்வுபூர்வமாக பேசியது.

இந்த படத்தை இங்கிலாந்தை சேர்ந்த இயக்குனர் டேனி பாய்ல் இயக்க, இந்திய நடிகர்களான தேவ் படேல், அனில் கபூர், இர்ஃபான் கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அற்புத படைப்பான இப்படம் 11 ஆஸ்கர் விருதுகளை வென்றது. அதில், சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல் ஆகிய பிரிவுகளின் கீழ் பெற்றது.

குறிப்பாக,ஏ.ஆர். ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றார். ஆஸ்கர் வென்ற மேடையில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என தமிழில் கூறி, தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்தினார்.

அதையடுத்து, உலகம் முழுவதும் மேலும் பிரபலம் அடைந்த அவர், பல ஹாலிவுட் படங்களிலும் வெளிநாட்டுப் படங்களிலும் இசையமைப்பாளராகப் பணியாற்றினார்.

இந்நிலையில், தற்போது ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பாகத்தின் உரிமையை ‘பிரிட்ஜ் 7’ என்ற தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அது குறித்து பேசியுள்ள அந்நிறுவனத்தின் நிறுவனர் ஸ்வாதி ஷெட்டி

‘சில கதைகள் எப்போதுமே நம் மனதில் தங்குபவை. அப்படிப்பட்ட கதைதான் ஸ்லம்டாக் மில்லியனர். உலகளாவிய கலாச்சார எல்லைகளைக் கடந்தது அந்த கதை’ என தெரிவித்துள்ளார்.

ஆம், 2-பாக கதையும் மனதில் தங்கட்டும். பல ஆஸ்கர் விருதுகளை வெல்லட்டும்.!

slumdog millionaire second part is in talk
slumdog millionaire second part is in talk