ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில், எஸ்.ஜே.சூர்யாவிற்கு என்ன ரோல்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சங்களை மீறி வசூல் சாதனை படைத்து வருகிறது.
தற்போது ஜெயிலர்-2 படத்தில் ரஜினி இணைந்துள்ளார். இப்படத்தில் பிரபலங்கள் பலரும் நடித்து கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் எஸ்.ஜே. சூர்யா ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் வில்லனாக கலக்கி வரும் எஸ்.ஜே. சூர்யா, தற்போது ரஜினியுடன் இணைந்திருக்கிறார். இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்க போகிறாரா அல்லது வேறு ஏதேனும் முக்கியமான ரோலில் நடிக்க இருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
தற்போது சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தனது கனவுப்படமான ‘கில்லர்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில் பிரீத்தி அஸ்ராணி ஹீரோயினாக நடிக்கிறார். இதன் முதல் ஷெட்யூல் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.
இதனிடையில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார்-2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. மேலும், ரவிமோகனுடன் இணைந்து ‘ப்ரோகோட்’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.
‘ஜெயிலர்’ படம் பான் இந்திய அளவில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மிர்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அத்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், பாலகிருஷ்ணா ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபீஸில் ரூ. 1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ‘கூலி’ படம் 500 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
