Web Ads

இன்று எஸ்கே பிறந்த நாளில் ‘மதராஸி’ டைட்டில் வெளியீடு: அர்ஜுன் ரசிகர்கள் எங்கே?

சிவாஜி பட டைட்டிலை தொடர்ந்து, அர்ஜுன் பட டைட்டில் சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்.கே.23’ பட ஷூட் 90 சதவீதம் முடித்து, சல்மான்கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ பட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

‘சிக்கந்தர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. பின்னர், எஸ்கே படப் பணிகளை முருகதாஸ் மேற்கொள்கிறார். இப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் 40-வது பிறந்த நாளான இன்று, அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அப்படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது.

அவ்வகையில், திரைப்படத்திற்கு ‘மதராஸி’ என பெயரிடப்பட்டுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் கதைக்களத்தில் பான் இந்திய படமாக ‘மதராஸி’ உருவாகி வருகிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு, பழைய பட டைட்டில்கள் தேர்வாகி தொடர்வது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என பெயரிடப்பட்ட நிலையில், தற்போது ‘மதராஸி’ என்கிற தலைப்பும் பழைய படத்தில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது.

அதாவது, 2006-ம் ஆண்டு அர்ஜுன், வேதிகா நடிப்பில் ‘மதராஸி’ திரைப்படம் வெளியானது. அப்படம் தோல்வி அடைந்தாலும் அந்த டைட்டிலை 19 ஆண்டுகளுக்கு பின் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து இணையவாசிகள், ‘அர்ஜுன் ரசிகர்கள் போர்க்கொடி தூக்க மாட்டார்கள் என நம்பலாம்..ஹி..ஹி..!’ என தெரிவித்துள்ளனர்.