Web Ads

ராஷ்மிகா நடித்த ‘சாவா’ வரலாற்றுப் படம்: 3 நாளில் செம கலெக்‌ஷன்

ராஷ்மிகா நடித்த பாலிவுட் படமான ‘சாவா’ வசூல் பற்றிப் பார்ப்போம்..

உலகளாவாயு கலெக்‌ஷனில் ‘சாவா’ 3 நாட்களில் சுமார் ரூ.150 கோடி கொடுத்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்..

இயக்குனர் லக்ஷ்மன் உத்தேகரின் ‘சாவா’ திரைப்படம், மராட்டிய மன்னர் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அவர் சத்ரபதி சிவாஜியின் மகன்.

படத்தில் சாம்பாஜி மகாராஜாவாக விக்கி கௌஷல் நடித்துள்ளார். அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ராஷ்மிகா மந்தனா சாம்பாஜி மகாராஜாவின் மனைவி யேசுபாயாக நடித்துள்ளார். படத்தில் அக்சய் கண்ணாவும் நடித்துள்ளார், அவர் முகலாய மன்னர் ஔரங்கசீப்பாக நடித்துள்ளார். ரூ.130 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை தினேஷ் விஜான் தயாரித்துள்ளார்.

‘அனிமல்’ படத்திற்கு பிறகு ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான 2-வது பாலிவுட் படம் சாவா. இதற்கு முன்னதாக ரன்பீர் கபீர் மற்றும் ராஷ்மிகா காம்பினேஷனில் வெளியான ‘அனிமல்’ ரூ.900 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது.

இந்தப் படத்திற்கு பிறகு தற்போது திரையில் பட்டையை கிளப்பி வருகிறது ‘சாவா’ படம். இப்படம், 3 நாட்களில் உலகளவில் ரூ.150 கோடியை பிடித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘வர வர புஷ்பா பட ஹீரோயினுக்கு, மார்க்கெட் ஏறிக்கிட்டே போவுது. அதுக்காக பிறந்த ஊரை மறந்திராதீக.!’