ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ படத்துக்காக சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட் லுக்..

மதராஸி, பராசக்தி ஆகிய படங்களின் அப்டேட்ஸ் பார்ப்போம்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படம் ஹார்பரில் நடக்கும் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரில்லர் படமாக உருவாகிறது.

படத்தில் சிவகார்த்திகேயன் முன்னாள் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் லுக் பார்க்கையில், போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார் என தெரிகிறது. இலங்கையில் நடைபெற்ற படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் இந்த லுக்கில் நடித்திருக்கலாம் என கணிக்கப்படுகின்றது.

சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘குட்நைட்’ முகழ் விநாயக் சந்திரசேகர் படத்தில் நடிக்கவுள்ளார். SK24 படத்தின் இயக்குனர் இவர் என சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்த புதிய படத்திற்காக சிவகார்த்திகேயன் இந்த கெட்டப்பில் இருக்கின்றாரா? எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுவரை சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ கெட்டப்பில் இருந்து வந்தார். ஆனால், தற்போது அந்த கெட்டப்பில் இருந்து மாறியிருக்கிறார். இப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா தெரிவிக்கையில், ‘மதராஸி’ படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் பிசியாக இருக்கின்றார். அவருக்காக தான் வெயிட் பண்றோம். அவர் வந்ததும் படப்பிடிப்பை துவங்கி விடுவோம் என கூறியிருந்தார்.

எனவே தற்போது ‘மதராஸி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் விரைவில் சிவகார்த்திகேயன் பராசக்தி படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ‘மதராஸி’ பட டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் செப்டம்பர் 5-ந்தேதி சொன்னபடி ரிலீஸாகும் என்பது உறுதியாகியுள்ளது.

sivakarthikeyan changed his look for madharasi movie climax
sivakarthikeyan changed his look for madharasi movie climax