‘தக் லைஃப்’ டிரெய்லர் முத்தக்காட்சி சர்ச்சை: அபிராமி, திரிஷா விளக்கம்..
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ டிரெய்லரில் கமல்-அபிராமி இடையேயான முத்த விவகாரம் சர்ச்சையாகி தொடர்கிறது. இந்த வயதில் லிப் டூ லிப் முத்தம் எல்லாம் தேவையா? என வலைதளங்களில் விளாசுகிறார்கள்.
இந்நிலையில் முத்தக் காட்சி பற்றி அபிராமி விளக்கம் கொடுத்திருக்கிறார், ‘தற்போது எல்லாம் இது தான் என்று இல்லாமல் எது வேண்டுமானாலும் சர்ச்சை ஆகிறது. மணி சாரின் லாஜிக்கை நான் கேள்வி கேட்க மாட்டேன். அவரின் லாஜிக்கை அப்படியே ஏற்கிறேன்.
தக்லைஃப் படத்தில் எனக்கு ஸ்டிராங்கான, அழகான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். ட்ரெய்லரில் வந்த முத்தக் காட்சி மூன்று வினாடி காட்சி ஆகும். எதற்காக அந்த முத்தம் என்பதை படம் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள்.
அப்பொழுது உங்களுக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. முத்தக் காட்சி குறித்து இந்த அளவுக்கு பேசுவது தேவையில்லாத விஷயம் என்றே நான் நினைக்கிறேன். எந்தவொரு முடிவுக்கும் வரும் முன்பு படம் பாருங்கள். எல்லாம் புரியும்.
வயது வித்தியாசத்தை பெரிதாக சொல்லி விமர்சிப்பது ஏன் என தெரியவில்லை. கமல் சார் படங்களில் முத்தக் காட்சிகள் இருப்பதால் பேசுகிறார்களோ என்னவோ. இதுவரை எந்த நடிகரும், நடிகையும் படத்தில் முத்தக் காட்சியில் நடிக்காமல் இல்லை. ஆனால், உச்சத்தில் இருப்பவர்கள் முத்தக் காட்சியில் நடித்தால் பெரிதாக பேசுகிறார்கள்’ என்றார்.
முன்னதாக ‘விருமாண்டி’ படத்தில் அபிராமி கமலுடன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. தற்போது ‘தக் லைஃப்’ ரொமான்ஸ் காட்சிக்கு அபிராமியை போன்று திரிஷாவும் பதில் அளித்துள்ளார். அதாவது, ‘டிரெய்லரை பார்த்து எந்த முடிவுக்கும் வர வேண்டாம். முழு படத்தையும் பாருங்கள்’ என கூறியுள்ளார்.
இந்த சர்ச்சையை தொடர்ந்து ‘தமிழில் இருந்துதான் கன்னடம் வந்தது’ என கமல்ஹாசன் பேசிய கருத்து மேலும் சர்ச்சையாகி உள்ளது.
