சிவகார்த்திகேயன்-நானி இணையும் திரைப்படம்; இயக்குனர் யார்?

Web Ads

எஸ்கே-நானி இருவரும் இணைந்தால் நன்றாக இருக்கும். அதற்கு முன்னதாக அப்படியொரு கதையும் அமைய வேண்டும். அப்போதுதான் எதிர்பார்ப்புகள் நன்றாக இருக்கும். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

‘அமரன்’ பட மெகா வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் தயாராகும் ‘மதராஸி’ படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இப்படம், செப்டம்பர் 5-ந்தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்து ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டது. மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பராசக்தி’ படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே நாளில், விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ திரைப்படமும் ரிலீஸாகிறது.

Web Ad 2

இந்நிலையில், தற்போது ‘பராசக்தி’ படத்தில் அதர்வா, ரவி என மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் சிவகார்த்திகேயன் நானியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து நானி தெரிவிக்கையில், கண்டிப்பாக நானும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடிப்போம்’ என கூறியிருந்தார். சிவகார்த்திகேயனும் ‘நானியுடன் விரைவில் இணைவேன்’ என்றார்.

இச்சூழலில் சின்னத்தில் இருந்து வந்து, தற்போது முன்னணி நடிகர்களாக உயர்ந்திருக்கும், முகச்சாயலும் ஒன்றுபோல அமைந்திருக்கும் இவர்களை இயக்கும் இயக்குனர் யார் என்பது ரசிகர்கள்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

sivakarthikeyan and nani may act in a movie togather
sivakarthikeyan and nani may act in a movie togather