கனடாவில் வேலை என்று சொன்னது விஜயா கண்ணீர் விட்டு கடைசியில் மனோஜை சிக்க வைத்துள்ளார் மீனா. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மனோஜ் ஒரு இன்டர்நேஷனல் ஏஜென்சிக்கு இன்டர்வியூ அட்டென்ட் பண்ண வந்திருக்க அங்கு மேலும் மூன்று பேர் வந்திருக்கின்றனர். 

அவர்களிடம் உங்களோட குவாலிபிகேஷன் என்ன என்று கேட்டு நீங்கள் எல்லாரும் படித்திருக்கிறத நான் ஒருத்தனே படிச்சிருக்கேன் என்று சொல்லி அவர்களை ஓட விடுகிறார். போட்டிக்கு யாருமே இல்லாததால் இந்த வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கையோடு உள்ளே செல்கிறார்.

மனோஜின் குவாலிபிகேஷன் பார்த்து அவர்களும் இந்த வேலைக்கு நீங்க தான் சரியான ஆள் என்று கூறுகின்றனர். உடனே சந்தோஷப்பட மேலும் வேலை கனடாவில் என்று சொல்ல உச்சகட்ட மகிழ்ச்சி அடைகிறார். எப்போ வந்து ஜாயின் பண்ணனும் என்று ஆர்வமாக கேட்க அவர்கள் அதற்கு சில ப்ரசீஜர் இருக்கு, முதல்ல நீங்க கொஞ்சம் பணம் கட்டணும் என்று சொல்ல மனோஜ் எவ்வளவு சார் கட்டி அப்ளிகேஷன் வாங்கணும் உடனே கட்டிடுறேன், 300 ரூபாய் இருக்கு என்று கூறுகிறார். 

அவர்கள் என்ன சார் காமெடி பண்ணிட்டு இருக்கீங்க 14 லட்சம் ரூபாய் கட்டணும் என்று சொல்ல மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். பணத்தை கட்டிட்டிங்கனா ஒரு மாசத்துல பிராசஸ் பண்ணி முடிச்சிடலாம். நான்கு ஐந்து மாசத்துல கட்டுன பணத்தை எடுத்துட்டுவீங்க அதுக்கப்புறம் நல்லா சம்பாதிக்கலாம் என்று சொல்கின்றனர். 

இங்கே விஜயா மனோஜ் மதியம் வரணும்னு சொன்னானா என்று ரோகினியிடம் கேட்க ஆமா ஆன்ட்டி இன்டர்வியூ முடிச்சிட்டு வருவாரு என்று சொல்ல இண்டர்வியூவா அவன் தான் ஏற்கனவே வேலைக்கு போயிட்டு இருக்கானே என்று முத்து கேட்க அந்த வேலையை விட்டுட்டாரு என்று ரோகிணி சொல்ல அண்ணாமலை என்னம்மா சொல்ற இது எப்போ என கேட்கிறார். விஜயா இன்னைக்கு தாங்க இதைவிட நல்ல வேலை கிடைக்குதுன்னு அந்த வேலையை விட்டுட்டான் கண்டிப்பா மனோஜ் வேலையோட தான் வருவான் என்று கூறுகிறார். 

பிறகு மனோஜ் வீட்டுக்கு வந்து விஜயாவிடம் காதில் ஏதோ ரகசியமாக சொல்ல அய்யய்யோ என்னடா சொல்ற என்று கதறி அழுகிறார். பிறகு திரும்பவும் எதையோ சொல்ல கடவுள் கண்ணைத் திறந்துட்டான் ஆனா ஒன்னு என்கூட இல்லாம பண்ணிட்டானே என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய எல்லோரும் என்னாச்சு என்று பதறுகின்றனர். என் கண்ணுலையே வச்சு வளர்த்தனே இப்ப என்கூட இல்லாம போயிடுச்சே.. கடவுளே கொடுக்கிறது தான் கொடுக்கிற இங்கேயே வச்சு கொடுக்கக் கூடாதா என்று அழுகிறார். 

ரோகிணி இவர்கள் அழுவதை பார்த்து பதறி என்னாச்சு மனோஜ் வேலை கிடைக்கலையா என்று கேட்க என் அறிவுக்கும் திறமைக்கும் ஏத்த வேலை இப்பதான் கிடைச்சிருக்கு கனடாவில் வேலை கிடைச்சிருக்கு என்று சொல்ல ரோகிணி சந்தோஷப்படுகிறார். லட்ச லட்சமா சம்பளம் கிடைக்கப் போகுது என்று சொல்ல விஜய்யா அந்த சம்பளத்தை கொடுத்து இங்கே வேலை கொடுக்கக் கூடாதா என்று அழுகிறார். 

ரொம்ப குளிருமே, உன்னால எப்படிடா இருக்க முடியும் என அழுகிறார். வெளிய எல்லாம் சாப்பிடாத உடம்பு கெட்டுடும் வாரம் வரம் தலைக்கு எண்ணெய் வைத்து குளி என்று அட்வைஸாக அளந்து விடுகிறார். ரோகிணி விசா எல்லாம் வரத்துக்கு எப்படியும் ஒரு வாரம் ஆகிடும்ல என்று சொல்ல வேலை கிடைச்சதும் ஒரு மாசத்துல வந்துடும் என கூறுகிறார். உடனே மீனா வேலை கிடைச்சிடுச்சுனு தானே மாமா சொன்னாரு என்று கோர்த்து விடுகிறார்.

அண்ணாமலை அதானே வேலை கிடைச்சிடுச்சா கிடைக்கலையா என்று கேட்க வேலை கன்பார்ம் தான்பா ஆனா ஒரு 14 லட்சம் பணம் கட்டணும் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதுக்குத் தான் ரெண்டு பேரும் இப்படி ஒரு டிராமா போட்டாங்களா என்று முத்து கிண்டல் அடிக்கிறார். 

அண்ணாமலை அங்கிருந்து எழுந்து வர மீனா மாமா சுடுதண்ணி கேட்டீங்களே என்று கேட்க எனக்கு வேண்டாம் அதை கனடா போறவனுக்கு கொடு என்று கூறுகிறார். ரூமுக்கு வந்த அண்ணாமலை விஜயாவும் மனோஜூம் செய்த கூத்தை நினைத்து நினைத்து சிரிக்க முத்து அதைப் பார்த்து ரசிக்க நீ என்னடா பார்த்துகிட்டு இருக்க என்று கேட்க நீ இப்படி சிரிச்சி எவ்வளவு நாளாச்சு நீ எப்பவும் இதே மாதிரி இருக்கணும் பா என்று கூறுகிறார். மேலும் இனிமே தினமும் கனடா போறன்னு இவங்க ஒரு கூத்த பண்ண தான் போறாங்க நாம சிரிக்க தான் போறோம் என்று சொல்கிறார்.

பிறகு ரவியை பார்க்க ஹோட்டலுக்கு வந்த ஸ்ருதியின் அம்மா ரவியை கூப்பிட்டு வைத்து வேலை செய்ய விடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க அடுப்பில் வைத்தது தீய தொடங்க ரவி அவரை வேலை செய்ற இடத்துக்கு வந்து இரிடேட் பண்ணாதீங்க இங்க இருந்து கிளம்புங்க என திட்டி அனுப்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.