மணிமேகலை மற்றும் பிரியங்கா குறித்து பேசி உள்ளார் வெங்கடேஷ் பட்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
ஆனால் நான்கு சீசன்களாக செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இணைந்து நடத்தி வந்தனர். ஆனால் சீசன் 5 தொடங்கும் முன்பே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக வெங்கடேஷ் பட்டு அறிவித்திருந்தார். ஏனெனில் அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப்பு குக்கு டூப்பு குக்கூ நிகழ்ச்சிக்கு ஜட்ஜ் ஆக பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் மணிமேகலை பெண் தொகுப்பாளராக இருந்து குக்காக இருக்கும் ஒருவரால் என்னால் வேலை செய்ய முடியவில்லை என்று மறைமுகமாக பிரியங்காவை பேசியிருந்தார். இதில் பலரும் மணிமேகலை மற்றும் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
சமீபத்தில் இது குறித்து வெங்கடேஷ் பட் பேசுகையில், இவர்கள் இருவரும் சண்டையை பார்க்கும் போது வீட்டில் இருக்கும் பெண்கள் சண்டை போடுவது போல் தான் தோன்றுகிறது. இருவருமே தனது திறமையால் முன்னேறி இந்த இடத்திற்கு வந்துள்ளனர்.
அவர்களுக்குள் இருக்கும் சின்ன பிரச்சனையை சமூக வலைத்தளங்களில் இருப்பவர்கள் கடந்த கால வாழ்க்கையை அசிங்கப்படுத்தி பேசுகின்றனர். அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.