மகாராஜா படத்தின் நூறாவது நாளை போஸ்டர் உடன் கொண்டாடியுள்ளது படக்குழு.
தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டு பக்கங்களிலும் கலக்கி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான படம் மகாராஜா. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
நிதிலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அனுராக் காஷ்யப்,மம்தா மோகன்தாஸ்,நடராஜன் சுப்பிரமணியம்,அபிராமி , சிங்கம் புலி,மணிகண்டன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இது மட்டும் இல்லாமல் வசூலில் மாஸ் காட்டியது.இந்த படம் வெளியாகி இன்றோடு நூறு நாட்கள் முடிந்த நிலையில் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.