சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நிகழப் போகிறது என்று ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் சிட்டி மீனாவை அடித்ததால் சத்யா திருந்தி சிட்டியுடன் சேராமல் இருந்து வருகிறார்.
மறுபக்கம் ரோகினி பி ஏ பிரச்சினையை சிட்டியிடம் சொல்ல, நான் உனக்கு உதவி பண்ணனும்னா முத்து போன்ல இருக்குற சத்யாவோட வீடியோ ஆதாரத்தை நீ லீக் பண்ணனும் என்ற கண்டிஷனை போடுகிறார்.
இதனால் ரோகினி அந்த வீடியோவை எப்படி எடுக்கப் போகிறார் கதை களத்துடன் அடுத்த வாரம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அது குறித்த ப்ரோமோ வீடியோவில், முத்து படுத்து கொண்டிருக்க எழுந்து சென்று விடுகிறார்.இதை மறைந்து பார்த்துக் கொண்டிருந்த ரோகினி, உடனே கட்டிலுக்கு பக்கத்தில் முத்துவின் போனை எடுக்க வர அந்த நேரம் பார்த்து மீனா என சொல்லிக்கொண்டு முத்து வந்துவிடுகிறார்.
ரோகினியை முத்து பார்த்தாரா? ஆதாரத்தை ரோகினி எப்படி லீக் செய்யப் போகிறார்? அடுத்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது