Pushpa 2

முத்து காரை காப்பாற்றிய மீனா, பத்திரிக்கையுடன் வந்த ரவி,ஸ்ருதி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்துவின் காரை மீனா காப்பாற்றி கொடுத்துள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 30-01-2025
SiragadikkaAasai Serial Today Episode Update 30-01-2025

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா பூ கொடுக்கும் இடத்தில் போலீஸ்காரர் மனைவியிடம் முத்துவின் கார் பிடித்து வைத்திருக்கும் விஷயத்தை சொல்ல சரிமா அவர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவார் நீயே அவர்கிட்ட சொல்லி பாரு என்று சொல்லுகிறார். மனோஜ் ரோகினியை பெரம்பால் அடிக்க எடுக்கிறார். ஆனால் ரோகிணி தூங்குவதை பார்த்து பாவமாக இருப்பதாக அம்மாவுக்கும் கூப்பிடலாம் என்று வெளியே வர விஜயா வந்தவுடன் ரோகிணி தூங்கிட்டு இருக்காங்க எழுப்பி அடிக்கலாமா இல்ல தூங்கிட்டு இருக்கும் போதே அடிச்சிடலாமா என்று கேட்க முழிச்சு இருந்தா ஒத்துக்க மாட்டா தூங்கும்போது அடிச்சிடு என்று சொல்ல விஜயாவின் கையைப் பிடித்து ரூமுக்குள் அழைத்து செல்கிறார்.

அடி என்று சொல்ல மனோஜ் ஓங்கி அடிக்க ரோகினி வலியில் துடிக்கிறார். எதுக்கு மனோஜ் இப்படி பண்ண எனக்கு வலிக்குது கால் சிவந்துருச்சு என்றெல்லாம் சொல்ல எல்லாம் உன் நல்லதுக்காக தான் அம்மா இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு சரியாயிடும் என்று விஜயா சொல்லுகிறார். ஆனால் ரோகிணி அதுக்குள்ள நான் செத்தே போயிடுவேன் என்றும் சொல்ல மனோஜ் ஆறுதல் சொல்ல போக விஜயா அவரை வெளியில் கண்காண்பித்து கூப்பிட்டு விடுகிறார்.

வெளியில் வந்த மனோஜ் ரோகினி பார்க்க ரொம்ப பாவமா இருக்குமா என்று சொல்ல, இதெல்லாம் அவளோட நல்லதுக்காக தான் இப்ப அடிச்சும் போது கத்துனது அவ அப்பாவோட ஆவி அப்போ அழுதது என்று கேட்க அழுதது ரோகிணி தான் என்று சொல்லுகிறார். நீ ஆவியோட குடும்பம் நடத்த போறியா கொஞ்சம் கேட்க இல்லம்மா என்று சொல்லுங்க அப்போ ரெண்டு மூணு நாளைக்கு பண்ணி தான் ஆகணும் வேற வழி கிடையாது என்று சொல்ல, உள்ளே ரோகினி தெரியாம பொய் சொல்லி இப்படி அடி வாங்கி கிட்டு இருக்கேன் இதுக்கு ஏதாவது பண்ணனும் என்று யோசிக்கிறார்.

மறுபக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த முத்து வெளியில் இருக்கும் காரை பார்த்துவிட்டு உள்ளே வருகிறார். உள்ளே ஒரு போலீஸ் என்ன விஷயம் முத்து என்று கேட்க நடந்த விஷயங்களை அவரிடம் சொல்ல நீ என்னை ஏதாவது ஒரு நல்லது பண்றேன்னு மாட்டிக்கிற என்று சொல்லுகிறார். என் பொழப்பு அதுல தான் சார் இருக்கு என்று சொல்ல நீ இருந்தாலும் போலீஸ்காரர் சட்டையில் கை வைத்து இருக்கக் கூடாது முத்து உன் மேல ஆயிரம் நியாயம் இருந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை சந்திச்சுக்கிட்டே இருக்க வேண்டியதாயிருக்கோம் என்று சொல்லி வெயிட் பண்ணு இன்ஸ்பெக்டர் வருவாரு என்று வெளியில் அனுப்புகிறார்.

வெளியில் வந்த முத்து செல்வத்துடன் பேசிக் கொண்டிருக்க இன்ஸ்பெக்டர் வருகிறார். உள்ளே சென்று நடந்த விஷயங்களை முத்து சொல்ல நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொன்னா போதும் என்று ட்ராபிக் போலீஸ் இடம் சட்ட மேல கை வச்சாலும் இப்படி பண்ணி இருக்கேன் என்று சொல்ல இல்ல சார் ரூல்ஸ் மீறி போயிருக்கா என்று சொல்ல அப்படின்னா பைன் மட்டும் போட வேண்டியதுதானே எதுக்கு வண்டிய புடிச்ச என்று கேட்டுவிட்டு ஃபைன் போட்டுட்டு சாவிய குடு என்று சொல்லிவிடுகிறார் உடனே முத்து ரொம்ப நன்றி சார் நீங்க ரொம்ப நியாயமா பேசுறீங்க என்று சொல்ல இன்னொரு வாட்டி இது மாதிரி பண்ணிட்டு பஞ்சாயத்துக்கு உன் பொண்டாட்டியை வீட்டுக்கு அனுப்பாத என்று சொல்ல மீனாதான் இதை செய்திருக்கிறார் என்பதை முத்து தெரிந்து கொண்டு வெளியில் வந்து மீனாவுக்கு போன் போட்டு நன்றி சொல்லிவிட்டு பிறகு திட்டியதற்கு சாரி என்று சொல்லுகிறார். வீட்டுக்கு வந்தா முத்து நீ ரொம்ப பெரிய ஆள் தான் மீனா என்று சொல்ல நான் ஏன் பெரிய ஆள் என்று கேட்கிறார். நான் கோவப்பட்டாலும் நீ எந்த இடத்துல யோசிச்சு முடிவெடுத்து இருக்க, இருவரும் நடந்த விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

மறுநாள் காலையில் ரவியும் ஸ்ருதியும் அவர்களது முதலாவது கல்யாண நாளை பிரம்மாண்டமாக கொண்டாட பத்திரிகையுடன் வந்து குடும்பத்தினருக்கு கொடுக்கின்றனர். குடும்பத்தினர் என்ன சொல்லுகின்றனர்? முத்து என்ன சொல்லப் போகிறார்? விஜயாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 30-01-2025
SiragadikkaAasai Serial Today Episode Update 30-01-2025