முத்துவிடம் பேசிய சீதா, மீனா எடுக்கப் போக முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
முத்துவிடம் வந்து சீதா பேச மீனா என்ன முடிவெடுக்க போகிறார் என்று பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் அம்மா சந்திராவை சந்தித்து பேச சீதாவின் அம்மா எங்க மாப்பிள்ளையும் மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்ல மீனா இருமா பொறுமையா பேசலாம் ரெண்டு பேருக்குமே வந்து ஒரு புரிதல் இல்லாம இருந்திருக்கு அதனால தான் அப்படி நடந்துக்கிட்டு இருக்காங்க அது பேசினால் சரியா போயிடும் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல இந்த வீட்டுக்கு எங்க மாப்ள எவ்வளவோ நல்லது பண்ணி இருக்காரு இப்போ சீதாவுக்கு கண்டிப்பா ஒரு நல்ல இடத்துல வரன் பார்க்கிறேன் என்று சொல்லி இருக்காரு என்று சொல்லுகிறார்.
அதற்கு அருன் அம்மா சீதா மனசுல என்ன இருக்குன்னு தெரியாம எதுக்கு இப்படி பண்ணனும் என்று கேட்க நாங்க கஷ்டப்பட்டு வளர்ந்த குடும்பம் ஆசைப்பட்டது கிடைக்கல நானும் பரவாயில்லை என்று சொல்லி இதுக்கு அப்புறம் இந்த விஷயமா பேசறது தான் நீங்க இங்க வர வேண்டாம் என்று சொல்ல என்னம்மா நீ இப்படி பேசிகிட்டு இருக்க என்று மீனா கேட்கிறார் நீ அமைதியா இரு என்று சொல்லிவிட்டு நீங்க கிளம்பலாம் என்று அருண் அம்மாவை அனுப்பி விடுகிறார் உடனே கீழே வந்தவர் அருனிடம் எனக்கு என்னமோ இது சரிப்பட்டு வரும்னு தோணல அவங்க எல்லாமே அவங்க மாப்பிள்ளை தான் சொல்றாங்க என்று சொல்ல இத வச்சு எனக்கு பழிவாங்க பாக்குறானா என்று சொல்லிவிட்டு என்னைக்கு இருந்தாலும் சீதா தான் என்னோட பொண்டாட்டி உன்னோட மருமக என்று சொல்லிவிட்டு அழைத்துச் சென்று விடுகிறார்.
மறுபக்கம் சீதா கார் செட்டில் முத்துவை சந்திக்கிறார். என்ன விஷயம் சீதா என்று கேட்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் மாமா என்று சொல்லுகிறார் சொல்லியிருந்தா வீட்டுக்கே வந்து இருப்பேன் என்று சொல்ல இல்ல மாமா இங்க பேசினா தான் சரியா இருக்கும் என்று சொல்லிவிட்டு நான் சொல்றதுக்கு கோபப்படாதீங்க என்று சொல்லுகிறார் நல்லவர் தான் நான் எல்லாமே பார்த்துட்டு தான் லவ் பண்ண என்று சொல்ல அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் வாழ்க்கை நிச்சயமா நல்லா இருக்காது வஞ்சம் வைத்து பழி தீர்க்கிறவன் பொண்டாட்டியை எப்படி சந்தோஷமா வச்சுப்பா என்று சொல்லுகிறார்.
இன்னைக்கு அவங்க அம்மா வீட்டுக்கு வந்தாங்க என்று சொல்ல அப்போ சம்பந்தமே பேசி முடிச்சிட்டீங்களா என்று கேட்கிறார் இல்ல மாமா நீங்க எங்க அப்பா இறந்ததுக்கு அப்புறம் எங்க வீட்டுக்கு வருது ஆதரவா இருந்திருக்கீங்க உங்க விருப்பம் இல்லாம எதுவும் பண்ண மாட்டேன் என அம்மா சொல்லிட்டாங்க என்று சொல்ல அவங்க பெரியவங்க யார் நல்லவங்க கெட்டவங்க எல்லாம் உனக்கு தெரியுது நீ சின்ன பொண்ணு உனக்கு தெரியாது என்று சொல்லுகிறார் மீண்டும் மீண்டும் அருண் நல்லவன் என்பதை முத்துவுடன் சொல்ல ஒரு கட்டத்திற்கு மேல் முத்து என்ன கெட்டவன்னு கூட சொல்லு ஆனா நல்லவன்னு சொல்லாத என்று கோபப்படுகிறார் உனக்கு என்ன செய்யணும் எனக்கு தெரியும் சீதா உனக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு தருவேன் நீ கிளம்பு என்று சொல்லி அனுப்பி வைக்க மறுபக்கம் அருண் மீனாவை சந்தித்து பேசுகிறார்.
அருண் மீனாவிடம் எனக்கு கல்யாணம் ஆகும்னு நினைக்கல நான் முதல்முறையா சீதாவை பார்த்தவுடனே என் மனசுக்குள்ள ஒரு மாற்றம் வந்துச்சு என்று சொல்ல மீனாவும், சீதாவும் அப்படித்தான் சொல்லிக்கிட்டு இருந்தா என்று சொல்லுகிறார் உடனே அருண் எங்களுக்கு உள்ள ஏற்பட்ட காதல் மெச்சூரிட்டியானது அது எந்த காரணத்தை கொண்டு பிரிய மாட்டோம் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆகாது நான் சீதாவை நன்றாக பாத்துப்பேன் என் குடும்பம் மாதிரி உங்க குடும்பத்துக்கு செய்ய வேண்டிய எல்லாமே செய்வேன் என மீனாவிடம் சொல்லுகிறார். நீங்க எங்களுக்கு உதவி பண்ணுவீங்கன்னு நம்புகிறேன் என்று சொன்னால் இதுல நான் மட்டும் முடிவெடுக்க முடியாது வீட்ல இருக்குற எல்லாருமே எடுக்கணும் என்று சொல்ல சீதாவோட விருப்பமும் ரொம்ப முக்கியம் தானே என்று சொல்லிவிட்டு இதுக்கு மேல எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
முத்து வீட்டில் மீனாவுக்காக வாசலில் காத்துக் கொண்டிருக்க மீனா வருகிறார். முத்து என்ன கேட்கிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
