சூர்யா கேட்ட கேள்வி, விஜி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அர்ச்சனா நந்தினி சந்தித்து பேச நந்தினி விஜி வீட்டுக்கு போவதாக சொல்லுகிறார். எனக்கு அவங்க ரொம்ப ஆதரவா இருக்காங்க எனக்கு ஒரு வேலையை ரெடி பண்ணி கொடுத்து இருக்காங்க என்று சொல்ல அர்ச்சனா வேலைக்கு போறியா சொல்லவே இல்ல என்று தெரியாதது போல் கேட்க அர்ச்சனா சமைக்கும் விஷயத்தை சொல்லுகிறார். பியூச்சர்ல பெரிய ஆளா வந்துருவேன் என்று அர்ச்சனா சொல்ல அதெல்லாம் எனக்கு தெரியலம்மா ஆனா என் தங்கச்சிக்காக கடன் வாங்கி இருக்கேன் அதை கொடுக்கணும் என்று சொல்ல அர்ச்சனா சரி நான் உன்ன டிராப் பண்றேன் என அழைத்துச் செல்கிறார். பிறகு வீட்டுக்கு வந்தவுடன் உள்ள எல்லாம் கூப்பிட மாட்டியா என்று கேட்க அதற்கு என்னமா வாங்க என்று அழைத்துச் செல்கிறார். வழியில பார்த்து பேசும்போது நம்ம வேலையை பத்தி சொன்னேன் அவங்க பாக்கணும்னு சொன்னாங்க என்று விஜயிடம் சொல்ல அவரும் சரி என்று சொல்லுகிறார்.
உடனே விஜி நம்ம சமைக்க ஆரம்பிக்கலாம் நந்தினி கடைக்காரர் போன் பண்ணிட்டாரு என்று சொன்னா அர்ச்சனா நீங்க சமையுங்கள் நான் ஓரமா உட்கார்ந்திருக்கேன் என்று சொல்ல இவர்கள் வேலையை ஆரம்பிக்கின்றனர் நந்தினி உப்பு எடுக்க போகவும் விஜி இட்லி துணி எடுக்கும் போகும் நேரம் பார்த்து அர்ச்சனா மாவில் மருந்து ஒன்று கலந்து விடுகிறார். பிறகு அவர்கள் வந்தவுடன் வேலையை ஆரம்பிக்க அர்ச்சனா இதுதான் உங்க பிசினஸ் ஓட கடைசி நாள் என்றும் மனதில் நினைக்கிறார். நந்தினி ஒரு பக்கம் இட்லி ஊத்த மறுபக்கம் விஜி இடியாப்பம் செய்கிறார். நந்தினி சாப்பிடுறீங்களா என்று கேட்க எனக்கு இப்போ வயிறு சரியில்லை எனக்கு இடியாப்பம் பிடிக்கும் வேணா நீ எனக்கு கட்டிக் கொடுத்துவிடு என்று சொல்ல நந்தினியும் கட்டிக் கொடுக்கிறார்.
அர்ச்சனா கிளம்பிய உடன் இவர்கள் ஹோட்டலுக்கு ரெடி பண்ணி அனுப்பி விட்டு இருவரும் உட்கார்ந்து பேசுகின்றன. ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா இந்த வேலை நல்லபடியா போய்கிட்டு இருக்கு என்று சொன்னா எனக்கும் தான் நந்தினி என்று விஜி சொல்லுகிறார். கஷ்டத்துல கை கொடுத்து தூக்கி விட உங்கள மாதிரி ஒரு ஆள் கிடைக்கிறது ரொம்ப பெரிய விஷயம் என்று சொல்கிறார். சரி அதெல்லாம் விடு நந்தினி நேத்து அண்ணன் அல்வா வாங்கிட்டு வந்தாரு போல என்று சொல்ல அது உங்களுக்காக அண்ணன் வாங்கிட்டு வந்தது உங்களுக்கு தான் தெரியுமே அவர் அவங்க அம்மாவ வெறுப்பேத்தணும் அவ்வளவுதான் என்று சொல்லுகிறார். சரி பூவை என்ன பண்ண என்று கேட்க சாமிக்கு போட்டுட்டேன் என சொல்லுகிறார். சரிக்கா டைம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன் என நந்தினி வெளியில் வருகிறார்.
மறுபக்கம் அர்ச்சனா வழக்கம் போல் ஹாஸ்டலில் இருக்கும் பிரண்டுக்கு போன் போட்டு உனக்காக சூப்பரான சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன்வா என்று கூப்பிடுகிறார். மட்டன் பிரியாணியா என்று கேட்க இடியாப்பத்தை பார்த்தவுடன் என்னடி இடியாப்பம் வாங்கிட்டு வந்து இருக்கேன் வந்து இருக்கேன் டேஸ்ட் சூப்பரா இருக்கும் சாப்பிடு என்று சொல்ல, ஒரு வாய் சாப்பிடும்போது இவளை நம்பி சாப்பிடலாமா என்று யோசித்து விட்டு பிறகு சாப்பிடுகிறார். உடனே சூப்பரா இருக்கு என்று சொல்லி இன்னும் வாங்கி சாப்பிட இந்த மருந்து எவ்வளவு சீக்கிரத்துல வேலை செய்து இப்ப தெரிஞ்சுடும் என நினைக்கிறார். பிறகு நந்தினி வீட்டுக்கு வந்தவுடன் கிச்சனுக்கு சென்று வேலை பார்க்க அங்கேயும் வேலை பாக்குற எங்கேயோ வேலை பாக்குற உடம்பு என்னத்துக்குமா ஆகிறது என்று கல்யாணம் பேசிக் கொண்டிருக்க சுரேகா கவனிக்கிறார்.
நந்தினி பாத்திரம் கழுவ கல்யாணம் அதெல்லாம் வேணாம் நீ போய் படுமா பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். உடனே சுரேகா எனக்கு காபி வேணும் நந்தினி போட்டு கொடுக்க சொல்லு என்று சொல்லிவிட்டு போக நந்தினி காபி போட்டு சுரேகா ரூமில் கொடுக்க அந்த நேரம் பார்த்து டிவியில் ஹோட்டல் ஒன்றில் இட்லி இடியாப்பம் சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வரும் நியூஸ் பார்த்து நந்தினி அதிர்ச்சி அடைய உடனே விஜியும் போன் போட்டு எனக்கு ரொம்ப பயமா இருக்கு நந்தினி என்று சொல்ல, ஹோட்டல் கடைக்காரருக்கு போன் பண்ணி பாருங்க என்று சொல்ல அவர் எடுக்க மாட்டேங்கறார் என்று சொல்ல நம்ம செஞ்சு கொடுத்த இட்லி இடியாப்பத்துல எந்த பிரச்சனையும் இருக்காது நீங்க பயப்படாதீங்க என்று சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் உணவுத்துறை அதிகாரிகள் சுந்தரவல்லி வீட்டுக்கு வந்து இதுவரைக்கும் 60 பேர் அட்மிட் பண்ணி இருக்காங்க அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா உங்களை அரெஸ்ட் பண்ணி ரிமாண்ட் பண்ண வேண்டியதா இருக்கும் என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி விவேக் மீது கோபப்பட அந்த நேரம் பார்த்து சூர்யா வருகிறார்.
சூர்யா வேற யாராச்சும் நடுவுல வந்தாங்களா என்று கேட்க ஆமா ஒருத்தவங்க வந்தாங்க அந்த அர்ச்சனா என்று சொல்ல சூர்யா அர்ச்சனாவா என்று கேட்கிறார். உடனே நந்தினி ஆமா சார் ஆனா அவங்களால எல்லாம் பிரச்சனை வந்திருக்காது என்று சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
